Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவாவுக்கு ‘யு‘ சான்று தர தணிக்கை குழு மறுப்பு

27 ஜூலை, 2013 - 17:27 IST
எழுத்தின் அளவு:

விஜய் நடித்து முடித்துள்ள படம் தலைவா. அமலாபால், ஹீரோயின். மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். போஸ்டர்களும் அடித்து குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கும் வேந்தர் மூவீஸ் விளம்பரத்துக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க தலைவா படத்திற்கு தணிக்கை குழு யு சான்று கொடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைமையிலான படக்குழுவினர் விஜய் படம்தானே தணிக்கை குழு தாராளமாக யு சான்றிதழ் தந்து விடும் என்று அபாரமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை தலைகீழானது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி ஏ கொடுக்க முடிவு செய்தனர். தயாரிப்பாளர், இயக்குனர் அனைவரும் வாதாடியதால் கடைசியில் தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுக்க முன்வந்தனர். ஆனால் படக்கு குழுவினர் யு தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்கள். அதனை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. சில காட்சிகளை நீக்கினால் யு தருவாதாக சொன்னார்கள். அந்தக் சீன்கள்தான் படத்தில் முக்கியமானது கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டது.

இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அங்கும் யு/ஏ உறுதி செய்யப்பட்டால் மும்பையில் மறு தணிக்கை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளிவந்தால் வரிவிலக்கு கிடைக்காது. இதனால் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய  கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு வரியாகச் சென்று விடும். வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வருமானத்தையும் சேர்த்துதான் வேந்தர் மூவீஸ் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி உள்ளது. ஒரு வேளை வரிவிலக்கு கிடைக்காவிட்டால் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும் என்று வேந்தர் மூவீஸ் கோரலாம். அதனால்தான் யு வாங்கியே தீருவது என்ற தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.

சமீப காலமா தமிழக அரசு விஜய்க்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்றும், விமானநிலையம் அருகே நடைபெற இருந்த பிரமாண்ட ரசிகர் மன்ற விழாவுக்கு தடைவிதித்தது. இப்போது தலைவா படத்துக்கு தொல்லை தருகிறது என்றும் விஜய் தரப்பு கருதுகிறது. எது எப்படி இருந்தாலும் அறிவித்த தேதிக்குள் படத்தை வெளியிட்டு விடுஙங்கள் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (43) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (43)

jee - jerusalam,இஸ்ரேல்
31 ஜூலை, 2013 - 17:24 Report Abuse
jee ஹாய் டோப KOOR
Rate this:
jee - jerusalam,இஸ்ரேல்
31 ஜூலை, 2013 - 16:58 Report Abuse
jee thala is copy of hind film.
Rate this:
appu - madurai,இந்தியா
29 ஜூலை, 2013 - 15:00 Report Abuse
appu அப்டியே இவன பாருங்க...சூப்பி போட்ட மாங்கொட்டையாட்டம் இருக்கு இவன் மூஞ்சி...இவன் அதுக்கு(நடிக்க) சரிபட்டு வரமாட்டான்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
29 ஜூலை, 2013 - 19:01Report Abuse
சு கனகராஜ் அப்ப அப்பு சரிப்பட்டு வருவாரோ ?...
Rate this:
D.Devendran - Bangalore,இந்தியா
29 ஜூலை, 2013 - 12:58 Report Abuse
D.Devendran Thalaiva, we are in with you, Don't worry we will hit the film vijay fannnnnnnnnnnnnnnnnnn once again....................rockzzzzzzzzzzzzzzzzzzz
Rate this:
senthil - k.giri  ( Posted via: Dinamalar Android App )
29 ஜூலை, 2013 - 10:47 Report Abuse
senthil எல்லாம் அரசியல் நேரடியாக டிவி யின் மூலம் மக்களை வந்து சேரட்டும்
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in