Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரம்பம் - அஜீத்தின் பட தலைப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

25 ஜூலை, 2013 - 11:30 IST
எழுத்தின் அளவு:

 ஒருவழியாக அஜீத்தின் படத்திற்கு தலைப்பு வெளியாகிவிட்டது. படத்திற்கு ‘‘ஆரம்பம்’’ என்று பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை. ஆரம்பத்தில் வலை என்று பெயர் வைத்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்துவிட்டனர்.

கடந்த மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போதும் பெயர் வெளியாகவில்லை. மாறாக ஒரு சிறிய டீசரை மட்டும் வெளியிட்டார்கள். அப்போது கூட அஜீத்தின் 53வது படம் டீசர் என்று தான் வெளியானது. ஒரு படத்திற்கு தலைப்பு வைக்க முடியவில்லையா என்று அஜீத் ரசிகர்களும் கோபமடைய தொடங்கினர். சிலர் தங்கள் சார்பில், படத்தின் தலைப்புகளை படக்குழுவுக்கு பரிந்துரைத்தார்கள். எந்த ஒரு படத்துக்கும் தலைப்பு குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை.

இந்நிலையில் ஒருவழியாக படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ஆரம்பம் என்று பெயர் வைத்துள்ளனர். அஜீத் சுயவிளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ்பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா, கி‌ஷோர், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர், சுமா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராமன் தயாரிக்கிறார், கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் விஷ்ணுவர்தன். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (112) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (112)

anbu - bangalore,இந்தியா
30 ஜூலை, 2013 - 18:49 Report Abuse
anbu ajith the great
Rate this:
gopikkannan k t - ramanathapuram,இந்தியா
30 ஜூலை, 2013 - 00:07 Report Abuse
gopikkannan k t நம்ம தல உண்மையா பேசுறது சில தரு தல ங்களுக்கு புரியல்ல என்ன செய்றது ? ஆனா ஒன்னு என்னைக்கு தல தல தா
Rate this:
Maharajan - THIRUNELVELI  ( Posted via: Dinamalar Android App )
26 ஜூலை, 2013 - 14:25 Report Abuse
Maharajan தல ஆட்டம் ஆரம்பம்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26 ஜூலை, 2013 - 18:52Report Abuse
சு கனகராஜ் அப்படின்னா உடம்பு ஆட்டம் தனியாவா ?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26 ஜூலை, 2013 - 18:59Report Abuse
சு கனகராஜ் ஐய்யய்யோ ஓ ஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓ........................................................ ஆ ஆ ஆஆஆ "ரம்பம் "............
Rate this:
appu - madurai,இந்தியா
27 ஜூலை, 2013 - 10:01Report Abuse
appuஐய்யய்யோ ஆனந்தமே....நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே...நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே...தலடா....நல்லா இருக்கா தல ரசிகர்களே?...
Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
26 ஜூலை, 2013 - 13:51 Report Abuse
விருமாண்டி தல ஒரு நல்ல மனிதர் .அதற்காகவே எனக்கு அவரை பிடிக்கும் மற்ற நடிகரை போல் திமிர் பிடித்தவர் அல்ல
Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
26 ஜூலை, 2013 - 13:37 Report Abuse
JAY JAY யப்பா...படத்துக்கு ஒரு வழியா " பேரு " வச்சுட்டீங்க... ஆனா படம் அஜித்தின் " பேரு " சொல்லும் படமா அமையுமா? ... கடசில எவனாவது கமெண்ட் எழுதுவான், படத்துக்கு பேரு வைக்கிறதுக்கு ஒரு வருஷம் யோசிச்சவங்க, படத்தின் ஸ்கிர்ப்ட் க்கு ஒரு மணி நேரமாவது யோசித்திருக்க கூடாதா என்று .... [ .பில்லா 2 பார்த்த அந்த திகிலான ........ " எபெக்ட் " டே ....... இன்னும் போகலிங்க...] .. எது எப்படியோ இந்த படமாவது மங்காத்தா போல வெற்றி அடைய வாழ்த்துக்கள் ...
Rate this:
மேலும் 104 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in