Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு இரண்டு முகம் இருக்கு - ஐஸ்வர்யா அர்ஜுன்!!

24 ஜூலை, 2013 - 03:48 IST
எழுத்தின் அளவு:

   ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்திருப்பவர் ஐஸ்வர்யா அர்ஜூன். முதல்படம் விஷால் உடன் ‘‘பட்டத்து யானை’’. இப்படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முதல்படம் தனக்கு எந்தமாதிரியான ரிசல்‌ட்டை கொடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்புடனும், சிறு பதட்டத்துடனும் இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
 
* சினிமாவுக்கு வரணும் என்றஆசை எப்ப வந்தது?

சின்ன வயசிலேயே இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே,வாய்ப்புகள் வந்தன. ஆனால், படிப்பை விட்டுடக்கூடாது என்ற முடிவோடு வீட்டில் இருந்தேன்.படிப்பை முடித்த பின், இது சரியான நேரம் என்று கருதி, களத்தில் இறங்கி விட்டேன்.

* அப்பா அர்ஜுன், உங்களுக்குஅறிவுரை வழங்கினாரா?


கடினமாக உழைக்க வேண்டும் என்பதை, அடிக்கடி கூறுவார். நடிப்பு விஷயத்தில் தலையிட மாட்டார். "படப்பிடிப்பின் போது, நீயாகவே தெரிந்து கொள் என,கூறி விட்டார். அம்மா, என் கூட படப்பிடிப்புக்கு வருவாங்க. அவங்ககிட்ட சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சிப்பேன்.

* சினிமாவில் உங்களின் ரோல் மாடல் யார்?

ஸ்ரீதேவி மேடம் நடித்த படங்களை அதிகமாக பார்ப்பேன். சமீபத்தில், ‘‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’’ படம் பார்த்தேன். அவங்க நடிப்பு, டான்ஸ், பேசும் விதம் எனக்கு பிடிக்கும். இப்படியெல்லாம் நடிக்க முடியுமான்னு பல கேரக்டர்களை மனசுக்குள் கொண்டு வந்து நிறுத்தினவங்க, ஸ்ரீதேவி மேடம்.

* நீங்க அப்பா செல்லமா,அம்மா செல்லமா?

நிறைய விஷயங்களை அம்மாவிடம் பேசுவேன். அவங்க, எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருங்காங்க. ஆனாலும், நான் அப்பா செல்லம் தான்.

* சினிமா தவிர?

டான்ஸ் ரொம்ப பிடிக்கும். கிடைக்கும்நேரத்தில், புத்தகங்கள் படிப்பேன். நிறைய பயணம் செய்வது பிடிக்கும். நல்லா சாப்பிடுவேன். (ஆனால்,உடம்பை பார்த்தா, அப்படி தெரியவில்லையே)

* நீங்க எந்த மாதிரியான டைப்?

எனக்கு இரண்டு முகம் இருக்கு. ரொம்பஅமைதியா இருப்பேன். இல்லைன்னா ரொம்ப ஆர்ப்பாட்டமா இருப்பேன். மூடுக்கு தகுந்த மாதிரி என்னை மாத்திப்பேன். இப்படி தான் இருப்பேன் என, உறுதியாக கூற முடியாது.

* "பட்டத்து யானை படம் வெளியாகஉள்ளது. உங்களுக்கு பயம், பதட்டம் இருக்கா?


பெரிய அளவு பதட்டம் இல்லை. தெளிவாக இருக்கேன். அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் டென்ஷன் இருக்கலாம். எனக்கு இல்லை. படம் வெளியாவதற்கு, முதல் நாள் வேண்டுமானால், சின்னதா பயம் வரும்னு நினைக்கிறேன்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

prabu - viluppuram,இந்தியா
25 ஜூலை, 2013 - 11:31 Report Abuse
prabu உன்னோட ஒரு முகத்தை பார்க்க சகிக்கில...... இதுல இன்னொரு முகமா???????? என்ன கொடும சார் இது
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
25 ஜூலை, 2013 - 17:43Report Abuse
சு கனகராஜ் உன் கோர முகத்தை மேக்கப் போடாமல் யாருக்கும் காட்டாதே...
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
24 ஜூலை, 2013 - 21:16 Report Abuse
Arumugam தந்தையை போல் மகளும் சிறந்த நடிகையாகவும் எந்த வம்புலும் மாட்டாமலும் வருவார் என்று நினைக்கிறேன்.
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
24 ஜூலை, 2013 - 19:03 Report Abuse
பி.டி.முருகன்    'பட்டது யானை' படப்பிடிப்பு திருச்சியில் நடந்த போது நேரில் பார்த்தேன். படம் வெற்றி பெறும்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
24 ஜூலை, 2013 - 15:22 Report Abuse
Angry ஜெய் ஆக்சன் கிங் மகளா நீ ? படப்பிடிப்பின் போது வெயில் தாங்காம மயங்கி விட்டாய்
Rate this:
Conjivaram Rajan Gopalkrishnan - Chennai,இந்தியா
24 ஜூலை, 2013 - 15:01 Report Abuse
Conjivaram Rajan Gopalkrishnan அம்மணி .. நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டிய பேரொளி பத்மினி, கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி, அஷ்டாவதானி பானுமதி இவர்களை போல நன்றாக நடிப்பு திறமையை நிரூபித்து நல்லபெயர் வாங்கவேண்டும் என்று வாழ்த்த ஆசை தான் .. அனால் தமிழ் திரை உலகில் பீம்சிங் எ.ப.நாகராஜன், ஸ்ரீதர், போன்ற சிறந்த இயக்குனர்கள் இல்லை .. மேலும் ஒரு படம் எடுக்க முயலும் போது சமூஹதுக்கு ஒரு நல்ல செய்தி தரவேண்டும், நல்ல கதையோடு நல்ல கருத்துள்ள பாட்டுகள் தர வேண்டும் என்று மேனகேட்டார்கள் .. இப்போது அதற்க்கு நேர் எதிர் நிலையில் இருக்கிறது தமிழ் திரை உலகம் .. நீங்கள் பெரிதாக சாதிக்க வாய்ப்பில்லை .. இருந்தாலும் வாழ்த்துக்கள் அம்மணி ..
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in