Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம்

23 ஜூலை, 2013 - 12:33 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுமான மஞ்சுளா(வயது 60) மரணம் அடைந்தார். சென்னை, ஆலப்பாக்கத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த மஞ்சுளா, கடந்த 18ம் ‌தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. நடக்க முடியாமல், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அடிபட்ட இடத்தில் ரத்தம் உறைந்து போய் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூலை 23ம் தேதி) காலை 11.45 மணியளவில் இறந்தார். காலையில் தனது கணவர் விஜயகுமாரிடம், தான் தைரியமான பொண்ணு என்றும், விரைவில் குணமாகி திரும்பிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

1953-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி பிறந்தவர் நடிகை மஞ்சுளா. 1969ம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். பின்னர் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை உள்ளிட்ட பல படங்களிலும், சிவாஜியுடன் டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி தவிர ரஜினி, கமல், ஆகியோரது படங்களிலும், தெலுங்கில் சோமன் பாபு, அக்கினி நாகேஸ்வரராவ் உள்ளிட்டவர்களின் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உன்னிடம் மயங்கினேன் படத்தில் நடிகர் விஜயகுமார் உடன் நடித்தபோது, அவருடன் காதல் வயப்பட்டார். விஜயகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்றபோதும் அவரையே திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களும் சினிமாவில் இருக்கின்றனர்.

மஞ்சுளாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்,  பிரபு, ஆதி, ஸ்ரீகாந்த், செந்தில், ஒய்.ஜி.மகேந்திரன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், ஒளிப்பதிவாளர் பிரியன், நடிகைகள் லதா, லட்சுமி, சங்கவி, சுஹாசினி, மீனா, இயக்குனர் கஸ்தூரி ராஜா, ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா, சரத்குமார், ராதிகா, ராதாரவி, பாக்யராஜ், சாந்தனு, பூர்ணிமா பாக்யராஜ், பி.வாசு, மனோரமா, மகேஸ்வரி, பிரசன்னா, சினேகா, ரம்யா கிருஷ்ணன், தேவிஸ்ரீ பிரசாத், கவுண்டமணி, ஹாரிஸ் ஜெயராஜ்,  சின்னி ஜெயந்த், அம்மா கிரியேசன்ஸ் சிவா, பாடகர் கிரிஷ், சங்கீதா, மனோரமா, சோனா, வையாபுரி, எடிட்டர் மோகன், வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், அனுராதா, சந்தானபாரதி, பாண்டியராஜன், மலையாள நடிகர் ஜெயராம், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். மேலும் திரையுலகினர் ஏராளமானபேர் தங்களது இரங்கலையும் தெரிவித்தனர்.

மஞ்சுளாவின் இறுதிசடங்கு நாளை(ஜூலை 24ம் தேதி) போரூரில் உள்ள மின் மயானத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (72) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (72)

Perumal Veeramalai V - Fahaheel,குவைத்
24 ஜூலை, 2013 - 09:32 Report Abuse
Perumal Veeramalai V அவர் ஆன்மா சாந்தி அடைய ஆழ்ந்த வருத்தங்கள்.
Rate this:
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
24 ஜூலை, 2013 - 08:33 Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு மஞ்சுளா அவர்கள் ஆற்றிய மிகப்பெரும் சேவை திரை உலகத்தினர் எல்லோருக்கும் நன்றாக தெரியும். மிகவும் பாவம்.
Rate this:
kumararumugam - karaikudi puduvayal,இந்தியா
24 ஜூலை, 2013 - 07:21 Report Abuse
kumararumugam ஆத்துமா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
Rate this:
Prem - Seoul  ( Posted via: Dinamalar Android App )
24 ஜூலை, 2013 - 06:52 Report Abuse
Prem RIP~ஆழ்ந்த அனுதாபங்கள், கணணீர் அஞ்சலி
Rate this:
YOOSUF - RAMNAD,இந்தியா
24 ஜூலை, 2013 - 00:52 Report Abuse
YOOSUF We are saddened to hear of your sudden loss
Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in