Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா

20 ஜூலை, 2013 - 15:32 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை... காதலிக்கவில்லை... என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்‌கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்‌களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள்  வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது...!!

Advertisement
கருத்துகள் (69) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (69)

Anith Pandian - Singapore,சிங்கப்பூர்
22 நவ, 2013 - 13:04 Report Abuse
Anith Pandian ஹாய் ஹன்ச்கா என்னும் 5 வருஷம், அதுக்குள்ள எப்பிடியும் சண்டை வந்து ப்ரிஞ்சிடுவீங்க. அதுக்கு நீங்க இப்பவ ப்ரிஞ்சிடுலம். நீங்க இருவரும் சிக்கிருமா பிரிவதற்கு என்னுடிய வாழ்த்துக்கள். ஏனென்றால் சிம்பு ஆரம்பித்து வைத்துதான் நயன்தார காதல் இப்ப ஊரை சிரிக்குது.
Rate this:
trichy jothivel - trichy,இந்தியா
31 ஜூலை, 2013 - 11:19 Report Abuse
trichy jothivel இவன் பேசுறது படத்துலையே புரியாது இவளுகளுக்கு எப்படி புரியிதோ சரி இத நாளும் வச்சி வாழு ,மறுபடியும் வாழு பண்ணாதடா கரடி தலையா
Rate this:
selva - Chennai,இந்தியா
21 ஜூலை, 2013 - 16:12 Report Abuse
selva சிம்பு அண்ணே சீக்கிரமா சட்டு புட்டுன்னு கல்யாண சோலிய பாருங்கண்ணே. வடிவேலு சொல்லுற மாதிரி இலவு காத்த கிளி கதையா ஆயிடபோகுது. நீங்களும் எப்படியெல்லாம் வாழ்க்கை துணைய தேர்ந்து எடுக்கிறீங்க ஆனா வேற எவனாவது கொத்திக்கிட்டு போய்டுறாங்க. கொஞ்சம் ஜரூரா வேலைய பாருங்கண்ணே. வெயிட் பண்ணாதீங்க ப்ளீஸ்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 ஜூலை, 2013 - 18:22Report Abuse
சு கனகராஜ் சிம்பு பாவம் அவன் தங்கை திருமணத்துக்கு பிறகுதான் எல்லாமே. அதுவரை இப்படித்தான் வாலாட்டி கொண்டே இருப்பான்....
Rate this:
appu - madurai,இந்தியா
23 ஜூலை, 2013 - 08:41Report Abuse
appuவால மட்டும் ஆட்டினா சரி தான்.......
Rate this:
Anguraj - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
21 ஜூலை, 2013 - 16:02 Report Abuse
Anguraj வாழ்த்துக்கள்
Rate this:
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
21 ஜூலை, 2013 - 15:21 Report Abuse
S.MAHESH KUMAR சிம்பு............... ஹன்சிஹாவை வெறும் செம்புன்னு நினைச்சிடாதே.
Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in