Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவிஞர் வாலியின் உடல் தகனம்; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!!

19 ஜூலை, 2013 - 16:01 IST
எழுத்தின் அளவு:

மறைந்த கவிஞர் வாலியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. ‘தமிழ் சினிமாவின் ஐந்து தல‌ை‌முறை கண்ட வாலி(ப) கவிஞர்’ என்று பெயர் எடுத்த வாலி இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைவால் நேற்று(ஜூலை 18ம் தேதி) மாலை காலமான வாலியின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த கவிஞர் வாலிக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை நேரில் செலுத்தினர்.

கருணாநிதி : வாலியின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் பேர் இழப்பு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூயுள்ளார்.

ரஜினி : கவிஞர் வாலிக்கு நடிகர் ரஜினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், வாலி அவர்களை பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும், அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், பா.ஜ.வின் இல.கணசேன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகினரை பொறுத்தமட்டில் ரஜினி, கமல், அஜீத் அவரது மனைவி ஷாலினி, சூர்யா, பிரபு, சிவக்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மிர்ச்சி சிவா, உதயநிதி ஸ்டாலின், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், டி.ராஜேந்திரன், ரமேஷ்கண்ணா, குஷ்பு, சுகன்யா, டைரக்டர்கள் பாலசந்தர், பாண்டிராஜ்,  பாண்டியராஜன், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஷங்கர், வசந்தபாலன், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஜி.சேகர், பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், வெங்கட்பிரபு, மாதேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், இசையமைப்பாளர்கள் மெல்லிச‌ை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், அனிருத், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ., பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், எடிட்டர் மோகன், சித்ரா லெட்சுமணன், சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன், உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

வானமும் அழுதது :
வாலியின் மறைவுக்கு வானமும், தனது கண்ணீரை மழையாய் சிந்தியது.

உடல் தகனம்:
வாலியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வாலி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் வாலி(ப) பாடல்கள் பல தலைமுறைக்கும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

Thekkudan Antoo - kerala,இந்தியா
21 ஜூலை, 2013 - 05:54 Report Abuse
Thekkudan Antoo 82 வயதில் 28 கு பாட்டு எழுதிய அற்புத கவினர் வாலி. அவரது கருத்து மிக்க பல பாடல்கள் என்றும் பலருக்கு உபயோகமாக இருக்கும்.அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது. அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வாலி உங்க ஜோலி முடிஞ்சி நீங்க போய் விட்டீர் . உங்களை நம்பி இருந்த திரை உலகம் உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறது. உங்களது பல பாடல்கள் எங்களுக்கு உற்சாகமும் ,தெம்பும் , நல்ல அறிவுரைகளையும், தாய் பாசத்தையும் போதித்தவை நீங்கள் சென்றாலும் உங்கள் பாடல்கள் வரும் தலை முறையை ம் வழிநடத்தும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை .ஆழ்ந்த வருத்தத்துடன்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 ஜூலை, 2013 - 19:00Report Abuse
சு கனகராஜ் வாலியின் புகழ் வானுயர்ந்து நிற்கும்...
Rate this:
kutty - dubai  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூலை, 2013 - 21:15 Report Abuse
kutty i agree with you mr.boopathi....... .
Rate this:
Azhagar Kumaran - Tirupur,இந்தியா
20 ஜூலை, 2013 - 14:19 Report Abuse
Azhagar Kumaran வாலி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் வாலி(ப) பாடல்கள் பல தலைமுறைக்கும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
Rate this:
Azhagar Kumaran - Tirupur,இந்தியா
20 ஜூலை, 2013 - 14:17 Report Abuse
Azhagar Kumaran ஆழ்ந்த வருத்தங்கள்....ஆத்மா சாந்திக் அடையட்டும்...வாலி அவர் என்றும் காலத்தால் அழியாத செல்வம்.வாழக வாலி,வாழக தமிழ்
Rate this:
Azhagar Kumaran - Tirupur,இந்தியா
20 ஜூலை, 2013 - 14:15 Report Abuse
Azhagar Kumaran ஆழ்ந்த வருத்தங்கள்....ஆத்மா சாந்திக் அடையட்டும்...வாலி
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in