Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவிஞர் வாலி குறித்து பிரபலங்கள் கருத்து

19 ஜூலை, 2013 - 12:13 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி நேற்று(ஜூலை 18ம் தேதி) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிசடங்கு இன்று (ஜூலை 19ம் தேதி) பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடக்கிறது.

கவிஞர் வாலி குறித்த பிரபலங்களின் நினைவலைகள்:

திண்டுக்கல் லியோனி, பட்டிமன்ற நடுவர்:
தலைமுறை கவிஞர்:
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களை எழுதி, மலைக்க வைத்தவர் கவிஞர் வாலி இலக்கிய கற்பனைகளில் புதுமையை புகுத்தியவர். ‘‘மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே, போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை, உன் புருவத்தில் கண்டேனே, தஞ்சையில் பறந்த புலிக்கொடியை, உன் பெண்மையில் கண்டேனே, இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே’’ என பெண்ணை, தமிழகத்தோடு ஒப்பட்டு எழுதியவர் “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே,‘’ என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எண்ணங்களை தெளிவுபடுத்தியவர்

கவிஞர் முத்துலிங்கம்: 
தீர்க்கதரிசன கவிஞர்:
எனது 45 ஆண்டுகால நண்பர் சினிமா பாடல்களைத்தவிர, பத்திரிகைகள், கவியரங்கங்களுக்கு வாலி கவிதை எழுதுவார் அக்கவிதைகளை என்னிடம் வாசித்து காண்பித்தபின், பத்திரிகைகளுக்கு அனுப்புவார்; நான், அவரை விட வயதில் இளையவன் அப்படி இருந்தும், என்னை வழிகாட்டியாக கொண்டிருந்தார் இந்த நட்புக்கு, தமிழ்தான் காரணம் இந்திய சினிமா வரலாற்றில், 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்; பாபநாசம் சிவனுக்கு பின், இசையறிவுடன் திகழ்ந்த கவிஞர் "நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார், என தீர்க்கதரிசனமாக, எம்ஜிஆர்,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாடல் எழுதியவர்.

மதுரை ரேடியோ நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம்:
தமிழே உன் தலையெழுத்து:
"பூ முகத்து புன்னகையே
இனி யார் முகத்தில் பார்ப்போம்!
புது நடையில் சொற்பொழிவை
யாரிடத்தில் கேட்போம்!
நடை துள்ளும் தமிழுக்கு
பகை வந்தால், அங்கே
உடைவாளை எடுக்கின்ற
பெரும் வீரர் எங்கே?
இமை மூடிக் கொண்டாய்!
புதை குழியில் மெல்ல
தமிழே உன் தலையெழுத்தை
நான் என்ன சொல்ல?
-இது அண்ணாதுரை இறந்த போது, கவிஞர் வாலி எழுதியது வாலிக்கும், இது பொருந்தும்

பின்னணி பாடகி மஹதி:
அவரது கைப்பிரதி என்னிடம்!:
"ஒஸ்தி பட இசை வெளியீட்டு விழாவிற்கு வாலி வந்திருந்தார் அந்தப் படத்தில், "நெடுவாலி என்ற பாடலை பாடியிருந்தேன் விழாவில், "உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா என்று நான் கேட்க, அவரோ, "உங்களின் கர்நாடக இசை மிகவும் பிடிக்கும் உங்களோடு நான் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா என்று கேட்டார். "தீயில்லை என்ற பாடல் பதிவில், அவர் கைப்பட எழுதிய காகிதத்தை, என்னிடம் பாடக் கொடுத்தனர் அதை அவர் நினைவாக என்னிடம் வைத்துக் கொண்டேன்

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்:
எம்ஜிஆர், தந்த கடிகாரம்:
நல்ல ஓவியர் இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார் இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக, புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாட்டெழுதியவர், வாலி ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது என்று தன்னை மறந்து சொன்னாராம். "கற்பகம் படத்தின் "மன்னவனே அழலாமா அத்தை மடி மெத்தையடி பக்கத்து வீட்டு பருவமச்சான் பாடல்கள், வெற்றியைத் தந்தது. டிஎம்எஸ்,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன். கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்எஸ்விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார் அப்போது எம்ஜிஆர், வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன் என்றார் சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்றெழுதியதும், எம்ஜிஆர், கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன் சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்

கவிஞர் நெல்லை ஜெயந்தா:
வலிமை கவிஞர் வாலி:
1958ம் ஆண்டு முதல் இன்று வரையிலும், திரைத்துறையில் தேடப்படும் ஒரே நபர் வாலி பாடல்களில் பழமையும், புதுமையையும் தரும் வலிமை, வாலிக்குத் தான் இருந்தது "டிமாண்ட் செய்யும் ஒரே பாடலாசிரியர் யாராக இருந்தாலும் இவரிடம் பாடல் கேட்டால் 4 பல்லவி, 4 சரணம் கொடுத்துவிடுவார் சிலர் புதியவர்களுக்கு, சிலவரிகளை கொடுப்பார்கள்; ஆனால், வாலிக்கு அந்த பழக்கமே இல்லை தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம், தன்னை ஒரு முட்டாள் போல் நினைத்து கேட்பார். ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் பலதை ரசித்தாலும், எனக்கு அவரது பழைய பாடல்களில் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ புதிய பாடல்களில் "என்ன விலை அழகே மிகவும் ரசித்துக் கேட்பேன்.  வாலி, பெரும்பாலும் தனிமையைத் தான் விரும்புவார் நன்கு பழகியவர்களை எந்த இடத்தில் கண்டாலும் அழைத்து பேசுவார் அது போல், ஒருவரை சந்திக்க "அப்பாயின்மென்ட் கொடுத்த பின், அதைவிட புகழ்பெற்ற அல்லது மிக முக்கியமான நபராக இருந்தாலும், அந்த நேரத்தை மாற்ற மாட்டார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஜூலை, 2013 - 19:17 Report Abuse
சு கனகராஜ் பாடல்கள் மூலம் ஆட்சி புரிந்த பாடலாசிர்யர் வாலி அனைத்து இதய சிறையில் சிம்மாசனமிட்டு இருக்கிறார்
Rate this:
kalathur gana karthi - muscat,ஓமன்
19 ஜூலை, 2013 - 13:24 Report Abuse
kalathur gana karthi சொல்வேந்தர் கவிசக்கரவர்த்தி ...வாலி இனி அவர் சொல்லை தொலைகாட்சியிலும் கேட்க வாய்ப்பில்லை ....உங்கள் உடல் புதைந்தாலும் ...உங்கள் வரிகள் உயிர்த்திருக்கும் ....கலியுகத்தில் மனிதனின் வயது 100 என்பார்கள்....இன்னும் 50 வது வருடத்தைதன் இலக்கிய வுலகில் தொட்டிருகிரீர்கள் ....அதுற்குள் உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார் கடவுள் ......என்றும் உங்கள் ....கவி... உயிர்வாழும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in