தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் எனும் அடையாளத்தோடு, வெங்கட்பிரபுவின் ‘‘சென்னை-600028’’ படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து ‘‘அஞ்சாதே’’, ‘‘கற்றது களவு’’, ‘‘வனயுத்தம்’’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது ‘‘ரெண்டாவது படம்’’, ‘‘வெண்ணிலா வீடு’’ போன்ற படங்களில் நடித்து வரும் விஜயலட்சுமி அளித்த பேட்டி இதோ...
* "சென்னை-28 வெற்றிக்கு பின், நல்ல இடத்தை பிடித்திருக்கலாமே? ஏன், இந்த தடுமாற்றம்?
அது உண்மை தான். அந்த படத்தின் வெற்றிக்கு பின், கொஞ்சம் திமிரோடு இருந்தேன்.நடிப்பு மீது, ஒரு சீரியஸ்னஸ் வரவில்லை. இந்த இடைவெளிக்கும், தடுமாற்றத்துக்கும்,நான் மட்டும் தான் காரணம். வேறு யார் மீதும், பழிபோட விரும்பவில்லை. விளையாட்டுதனம், பொறுப்பின்மை போன்ற, என் செயல்பாடுகள், அதற்கு காரணமாகி விட்டன.இப்போது என் தவறை உணர்ந்து விட்டேன். இனி, அது மாதிரி, கண்டிப்பாக நடக்காது.
* தமிழ் நன்றாக பேசத் தெரிந்தும், உங்களுக்கு போதிய வாய்ப்புஇல்லையே?
அதைப் பற்றி, எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன், சில நிபந்தனைகள் விதிப்பேன். அதனால் கூட, எனக்குவாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கலாம். தைப் பற்றி, ஆராய்ச்சி செய்ய விரும்ப வில்லை.
* உங்களுக்கும், இந்நேரம் காதல் வந்திருக்கணுமே?
யாருடைய வாழ்க்கையிலும், காதல் இல்லாமல் இருக்காது. என் வாழ்க்கையிலும் காதல்உண்டு. ஆம், நானும் காதலிக்கிறேன். இது, நீங்கள் நினைப்பது போன்ற காதல் இல்லை. வேறுவிதமான நேசம். என் அம்மாவையும், அப்பாவையும் நேசிக்கிறேன்(லக, லக வென, "சந்திரமுகி மாதிரி சிரிக்கிறார்) என்னைமாதிரி ஒரு நல்ல பொண்ணை பார்க்கவே முடியாது. ஏன்,என்னைப் பற்றி, கிசு கிசு வருது என, தெரியவில்லை.
* உங்களுக்கு பிடித்த நடிகை?
இப்போது நடிக்கும் நடிகைகளில்,சோனம் கபூர் (அம்பிகாபதிஹீரோயின்) நடிப்பு, எனக்குரொம்ப, பிடிக்கிறது. அவரின்காஸ்ட்யூம், மேனரிசம்,உள்ளத்தை கொள்ளைகொள்ளும் சிரிப்புஆகியவை, ரொம்பவேபிடிக்கிறது.
* எதிர்காலத்தில்?
அதிகமானபடங்களில்நடித்து விட்டு,அப்பா,அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்குவேன். அதற்கு பின்,கேமராவுக்குமுன் வரமாட்டேன்.ஆனால்,கேமராவுக்கு பின்இருந்து, இயக்குனராக வேண்டும் என்றஆசை இருக்கிறது. பார்க்கலாம்... என்கிறார்.