தமன்னாவுக்கு உதவி இயக்குனர்கள் சிபாரிசு! - Assistant Directors recommending Tamanna
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவுக்கு உதவி இயக்குனர்கள் சிபாரிசு!

14 ஜூலை,2013 - 17:56 IST
எழுத்தின் அளவு:

 கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. இதே படத்தில் இலியானாவும் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தமன்னா அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு கோடம்பாக்கத்தில் கோலோச்சி விட்டார். சில காலம் கனவுக் கன்னியாகவும் விளங்கியவர் பின்னர் பாலிவுட்டுக்கு சென்றார். ஆனால், அங்கே இவரது நடிப்பு எடுபடவில்லை. அதனால் தென்னிந்தியாதான் தனக்கு ஏற்ற இடம் என்று மீண்டும் தமிழ், தெலுங்கில் பிரவேசித்துள்ளார் தமன்னா.

இந்த நிலையில, ஏற்கனவே தெலுங்கில் பேசக்கூடிய தமன்னா, இப்போது தமிழையும் பயின்று விட்டார். முன்பு ஓரளவு பேசியவர் இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார். இதனால் எனக்கு தமிழ் தெரிந்த நடிகையே வேண்டும் என்று சொல்லும் சில டைரக்டர்களை சந்தித்து எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும். இனி நானும் தமிழ் நடிகைதான் என்று தமிழிலேயே பேசி வருகிறார்.

இதையடுத்து, தமன்னா இந்தி பொண்ணாச்சே. அதுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறதுக்குள்ள உசிரு போயிடுமே என்று அலுத்துக்கொண்ட உதவி இயக்குனர்களெல்லாம், இப்போது தமன்னாவுக்குதான் நல்லா தமிழ் தெரியுதே என்று தங்களது இயக்குனர்களிடம் சிபாரிசு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆக, தமன்னாவின் கொடி மீண்டும் கோடம்பாக்கத்தில் கோலாகலமாக பறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Advertisement
வாரிசை களம் இறக்கினார் ராமநாராயணன்வாரிசை களம் இறக்கினார் ராமநாராயணன் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kabali
  • கபாலி
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ராதிகா ஆப்தே ,தன்ஷிகா
  • இயக்குனர் :ரஞ்சித்
  Tamil New Film Yaakkai
  • யாக்கை
  • நடிகர் : கிருஷ்ணா
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :குழந்தை ‌‌வேல்லப்பன்
  Tamil New Film saavi
  • சாவி
  • நடிகர் : பிரகாஷ் சந்‌திரா
  • நடிகை : சுனுலட்சுமி
  • இயக்குனர் :இரா.சுப்பிரமணியன்
  Tamil New Film Adra Machan Visilu

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in