பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சாரதி, ஹன்சிபா என்ற நியூபேஸ்கள் நடிக்கும் படம் பரஞ்சோதி. கோபு பாலாஜி என்பவர் இயக்குகிறார். பரஞ்சோதி என்ற இளைஞரின் நிஜ கதையாம். படத்துக்காக 1990ம் ஆண்டு இருந்த மாதிரி ஒரு கிராமத்தை தேடியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. எனவே ஆர்ட் டைரக்டர் வினோத் மூலம் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு கிராமத்தையே அப்படியே ஷெட் போட்டுள்ளனர். கதைப்படி ஊரைச் சுற்றி தினையும், சோளமும் பயிரிட்டிருக்க வேண்டுமாம். இந்த விவசாயம் இப்போது அரிதாக இருப்பதால். இவர்களே கிராமத்து ஷெட்டை சுற்றி மூன்று மாதத்துக்கு முன்பே விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இப்போது ஷெட்டை சுற்றி பசுமையாக இருக்க படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படம் முழுக்க ஒரு நாய் நடிக்கிறதாம். இதற்காக ஒரே மாதிரியான நான்கு நாய்களை பிடித்து வந்து கதையின் காலத்துக்கு தக்கபடி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.