Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியில் படம் இயக்க ஆசைப்படும் கமல்!

14 ஜூலை,2013 - 15:28 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படம் மூலம் உலக அளவில் பேசப்படும் இயக்குனர், நடிகர் ஆகி விட்டார் கமல். அந்த படம் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டாலும், அவரது கருத்துக்கள் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடிக்கும் தருவாயில் இருக்கிறார் கமல்.

முந்தைய பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால்,. இந்த முறை எந்த மாதிரி இயக்கியிருக்கிறாரோ என்று விஸ்வரூபம் 2வை எதிர்பார்த்து ஒரு கூட்டமே காத்திருக்கிறது. ஆனால், கமல் ரொம்ப தெளிவானவர், இந்த முறை சிக்கலில் அவரை அத்தனை எளிதில் யாரும் சிக்க வைத்து விட முடியாது என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்க்ள். அதற்கேற்ப அவரும், இரண்டாம் பாகத்தில் சர்ச்சைகளை குறைத்து ரொமான்சுக்கு முதலிடம் கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், தமிழில் நேரடி படங்களை இயக்கி வரும் கமல், எப்போது இந்தியில் படம் இயக்குவார் என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது. அதற்கு கமல் பதில் அளிக்கையில், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் படம் இயக்கும் ஆசை உள்ளது. அதிலும். விஸ்வரூபம் 2 வை இயக்கிய பிறகு இந்தியில் படம் இயக்க தயாரிப்பாளர் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக ஹாலிவுட்டுக்கு இணையாக இன்னொரு வித்தியாசமான படத்தை கொடுப்பேன் என்கிறார் கமல்.

இயக்குனர்களுக்கு வலை விரிக்கும் நமீதா!இயக்குனர்களுக்கு வலை விரிக்கும் ... சினிமாவுக்காக விவசாயம் செய்த பட யூனிட்! சினிமாவுக்காக விவசாயம் செய்த பட ...

வாசகர் கருத்து

16 ஜூலை,2013 - 09:24
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) எந்த படம் எடுத்தாலும் கொஞ்சம் வசனம் புரியும் படி எடுங்கள் ...
santhosh - chennai  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூலை,2013 - 12:40
santhosh plz try ur new thinking...
Sankar Ramaoorthy - Sydney,ஆஸ்திரேலியா
15 ஜூலை,2013 - 10:23
Sankar Ramaoorthy ஏன் உள்ளூர்ல போனி ஆகலையா ???? இல்ல அங்க எதாவது அடிமை சிக்கிட்டனா ?????
N.S.RAMAN - mumbai,இந்தியா
15 ஜூலை,2013 - 09:11
N.S.RAMAN வாய் மூடி ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் (புஷ்பக் - பேசும் படம்) நல்ல கலைஞன் இவருக்கு வாய் அடக்கம் இல்லை
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
15 ஜூலை,2013 - 06:50
E Sreekanth வேண்டாம் இந்த விஷ பரீட்சை....
pravino - trichy  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூலை,2013 - 00:22
pravino உலகநாயகனே நீ உலகநாயகன் தான்
appu - madurai,இந்தியா
14 ஜூலை,2013 - 23:28
appu டே படமாடா எடுக்குறீங்க???டம்மு டிம்மு டொம்மு இப்டி படம் பூரா காத கிழிக்கிற சத்தம்...இது ஒரு படம் இத பாக்க இத்தனை ரசிகர்கள்...அட ஸீ...
Suresh Kumar - new jersey,யூ.எஸ்.ஏ
14 ஜூலை,2013 - 23:23
Suresh Kumar மிஸ்டர் அருண் - தேனி, Ruwis, UAE and Mr Raju - 4 குத்து பாட்டு , 5 fight வச்சு ஏற்கனவே பல படங்கள் தமிழ் சினிமால இருக்கு.. தயவு செய்து அந்த ஹீரோஸ் படத்த பாருங்க.. உலக நாயகன் படத்த நீங்க பார்க்க வேணும்னு அவசியம் இல்ல....
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
14 ஜூலை,2013 - 21:58
v.sundaravadivelu மொதல் பாகமே விஷயம் இன்னான்னு புரிஞ்சும் புரியாமையும் கெடக்கு.. இதுல ரெண்டாம் பாகம் வேற.. கமல் சாரே.. ஓவர் சீரியஸா எல்லாம் தின்க் பண்ணாம சும்மா அசால்டா ஒரு 'காக்கி சட்டை', 'அன்பே சிவம்' மகாநதி .இந்த மாதிரி எடுத்துட்டுப் போங்க வாத்த்யாரே.. ஓவர் பீலா வுட்டுக்கின்னு இருந்தா தமிழ் மக்களுக்குப் புரியாது.. புடிக்காது.. ஒங்களுக்குத் தெரியாததா.. ??
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை,2013 - 19:51
arun அத யாரு பார்ப்பா
ஜான்சன் - திருச்சி  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை,2013 - 19:43
ஜான்சன் வாழ்த்துக்கள்
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜூலை,2013 - 18:11
 அது எல்லாம் ஒரு படமா?.இவரா தன் படத்தை பீத்தி கொள்கிறார்.
kumaresan - trichy  ( Posted via: Dinamalar Windows App )
14 ஜூலை,2013 - 17:20
kumaresan keep it up thaliva...
raju kalluri - Dammam,சவுதி அரேபியா
14 ஜூலை,2013 - 15:42
raju kalluri தமாசு.....தமாசு......
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Romeo Julliet
  • ரோமியோ ஜூலியட்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ஹன்சிகா மோத்வானி
  • இயக்குனர் :லக்ஷ்மண்
  Tamil New Film Kadhal solla neram illai
  Tamil New Film Charles Shabik Karthika (CSK)
  Tamil New Film Demonty colony

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in