ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரிய அளவில் திறமையான நடிகை இல்லை என்றாலும், தனது ஆஜானபாகு உடல்கட்டை வைத்து ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா. அவரது உடல்கட்டுக்காகவே அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும, இளவட்ட ரசிகர்கள் கூடி அவருக்கு பெருமளவு வரவேற்பு கொடுத்தனர். இதனால் நம்பர்ஒன் நடிகைகளுக்கு இல்லாத அளவுக்கு நமீதாவுக்கு ஒரு கிரேஸ் ரசிகர்களிடம் இருந்து வந்தது.
அதனால்தான் தனது மார்க்கெட் வீழ்ந்தபோதும், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார் நமீதா. ஆனால், எந்த இயக்குனர்களும் அவர் பக்கம் திரும்பவில்லை. ஆனபோதும். இந்தியாவில் எனக்கு பிடித்த ஊர் சென்னைதான் என்று சொல்லிக்கொண்டு இங்கேயே முகாமிட்டு வரும் நமீதா. இப்போது திடுதிப்பென்று கேரக்டர் நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.
எனக்கு கதாநாயகி வாய்ப்புத்தான் தர வேண்டும என்று நான் சொல்லவில்லை. நல்ல கேரக்டர்கள் இருந்தாலும் கொடுங்கள். இளைஞன் படத்தில்கூட நான் வில்லியாகத்தானே நடித்தேன். அதுமாதிரிகூட கொடுங்கள். அசத்தலாக நடிக்கிறேன் என்று சில இயக்குனர்களை நாடிச்சென்று சான்ஸ் கேட்டு வருகிறார் நமீதா. என்றாலும் அவர் விரித்த வலையில் இன்னும் எந்த இயக்குனர்களும் சிக்கவில்லையாம்.