Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேமராமேன்கள் அப்டேட்டுல இருக்கணும்: சிங்கம்-2 ஒளிப்பதிவாளர் ப்ரியன் பேட்டி!!

13 ஜூலை, 2013 - 11:28 IST
எழுத்தின் அளவு:

 இப்போது தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் சிங்கம்&2 கேமரா மேன் ப்ரியன். படத்தில் இடம்பெறும் ஹெலிகாப்டர் ஷாட் பற்றித்தான் எல்லோரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவருடன் ஒரு மினி பேட்டி:

* அந்த பரபரப்பான ஹெலிகாப்டர் ஷாட் பற்றி சொல்லுங்க பாஸ்...?

இது டெக்னிக்கல் ரகசியம்தான் இருந்தாலும் சொல்றேன். தரையில பயன்படுத்தின ஹெலிகாப்டர் ஷாட்கள் அனைத்தும் ஆளில்லாத மினி ஹெலிகாப்டரில் கேமராவை பொருத்தி தரையில் இருந்தே இயக்கி எடுக்கப்பட்ட காட்சிகள். கடலில் கப்பலை சுற்றி எடுக்கப்பட்டது ஒரிஜினல் ஹெலிகாப்டர் ஷாட். கீழே சூரியாவே கப்பலைச் சுற்றி படகை ஓட்ட நான் ஹெலிகாப்டரில் இருந்த படமாக்க இயக்குனர் ஹரி கப்பலில் உட்கார்ந்து மானிட்டர் பார்த்துக்கொண்டே கைட் பண்ண ஏதோ போர்களத்துல இருந்த மாதிரி இருந்துச்சு. மறக்க முடியாத த்ரிலிங் அனுபவம்.

* பெரிய பட்ஜெட் படங்கள்ல மட்டும் வேலை செய்றீங்களே?


சிறிய படங்களில் பணியாற்ற கூடாதுன்னு எந்த முடிவும் கிடையாது. அதுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஹரி இயக்கிய 12 படங்களில் 11 படத்துக்கு நான்தான் கேமராமேன். அவரோட ஆஸ்தான கேமராமேன்னும் சொல்லிக்கலாம். பெரிய இயக்குனர்கள், பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணும்போது நம்பிக்கையான ஒரு கேமராமேனை தேடுறாஙங்க அதுல நான் மாட்டிக்கிறேன். நல்ல கதையோட சின்ன பட்ஜெட் படம் வந்தா கண்டிப்பா செய்வேன்.

* ஒளிப்பதிவுங்றது எப்படி இருக்கணும்?

ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறதே தெரியக்கூடாது. கேமராமேன் பிரமாண்ட ஷாட் வச்சிருக்கான், சூப்பரா லைட் பண்ணியிருக்கான்னு ரசிகர்கள் விமர்சனம் வரக்கூடாது. ரசிகனை கதைக்குள்ள அழைச்சிக்கிட்டு போறதுதான் கேமராமேன் வேலையே தவிர தன்னை முன்னிருத்திக்கிறதில்ல. கதை என்னமாதிரி கேட்கிறதோ அப்படித்தான் ஒளிப்பதிவு பண்றேன். இது என்னோட தனிப்பட்ட கருத்து.

* நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்துக்கிட்டே இருக்கே?

நிச்சயமா... 3 மாதத்துக்கு ஒரு புது கேமரா வருது. புதுப்புது டெக்னாலஜி வருது. எல்லாத்தையும் கத்துக்கிட்டு அப்டேட்டுல இருக்கணும். ஆனா படத்துக்கு என்ன தேவையா அதை மட்டுந்தான் செய்யணும். புதுசா ஒரு டெக்னாலஜிய கத்துக்கிட்டா அதை அடுத்த படத்துலேயே திணிக்க கூடாது.

* படம் எப்போ டைரக்ட் பண்ணப்போறீங்க?

அது ரொம்ப பெரிய வேலை. எனக்கு எப்பவுமே கேமராதான் துணை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

rajasekar - tiruppur  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2013 - 08:17 Report Abuse
rajasekar படத்தி்ற்கு மிக பெரிய பலம்
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
13 ஜூலை, 2013 - 17:53 Report Abuse
saravanakumar என்ன அப்டேட்டுல இருந்து என்ன use சிங்கம் 2 மொக்கை ஆயிடுச்சே
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 17:51 Report Abuse
சு கனகராஜ் நன்றாக உழைத்துள்ளார்
Rate this:
appu - madurai,இந்தியா
13 ஜூலை, 2013 - 13:45 Report Abuse
appu எல்லா கேமரா மேனும் நல்ல அப்தேட்டுல தான் இருக்காங்க..பிக்ச்சர் குவாலிட்டில நல்லா தெரியுது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in