அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
முதலில் தெலுங்கு, அப்புறம் இந்தி, அதற்கு பின், தமிழ் என, ரிவர்ஸ் கியரில், கோலிவுட்டுக்கு வந்தவர், நீத்து சந்திரா. "தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில், ஹீரோயினாக நடித்தாலும், கோடம்பாக்கம், அவரை குத்தாட்டம் ஆட விட்டுத் தான், ரசித்தது. ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக, "யுத்தம் செய், சேட்டை ஆகிய படங்களில், கலக்கலாக குத்தாட்டம் போட்டார். "இனி, ஹீரோயினாக நடிக்க முடியாதோ என்ற ஏக்கத்தில் இருந்த நீத்துவை, ஹாலிவுட், இரு கரம் நீட்டி வரவேற்றுள்ளது.
"தி வோல்ப்மேன், ஜுராசிக் பார்க்-3 ஆகிய படங்களை இயக்கிய, ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஜோ ஜான்ஸ்டன், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க, நீத்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம். இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம். ஏற்கனவே, "ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற, கிரேக்க மொழி படத்திலும் நடித்து வரும், நீத்து சந்திரா, ஹாலிவுட் வாய்ப்பும் கிடைத்துள்ளதால், உற்சாகத்தில் ரெக்கை கட்டி பறக்கிறார்.