Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுறாவுடன் சண்டை போடும் ரஜினி! கோச்சடையான் லேட்டஸ்ட் நியூஸ்!!

25 ஜூன், 2013 - 15:34 IST
எழுத்தின் அளவு:

கோச்சடையான் படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் இதுதான், படத்தில் நடிகர் ரஜினி, சுறா மீனுடன் சண்டை போடுகிறாராம். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய 3டி படம் இதுவாகும். படத்தில் ரஜினி அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவருடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படம் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் லேட்டஸ்ட் தகவல் ரஜினி, சுறா மீன் உடன் சண்டை போடுவது தான். படத்தில் வரும் கிராபிக்ஸ் ரஜினி, பயங்கரமான சுறா மீனுடன் சண்டை போடுகிறாராம். இந்த காட்சியில் ரசிகர்கள் மிரள்வது உறுதி என்று யூனிட்டை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கிடையில் கோச்சடையானைத் தொடர்ந்து டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ரஜினியை வைத்தே அறிவிக்கச் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
26 ஜூன், 2013 - 19:16 Report Abuse
Angry ஜெய் தலைவன் எத்தனை நாளைக்குதான் இந்த அற்ப மனிதர்களை அடித்து நொறுக்கி சண்டை போடுறது , எதற்கும் ஒரு மாற்றம் தேவை , ஆனா தலைவனுக்கு எதிரிங்க ரொம்ப பக்கத்துலதான் இருக்காங்க போல
Rate this:
syed nabi - muscat ,இந்தியா
26 ஜூன், 2013 - 14:05 Report Abuse
syed nabi ஹாய் சூப்பர் தலைவா
Rate this:
Cinema Raja - Kodambakkam,இந்தியா
26 ஜூன், 2013 - 13:23 Report Abuse
Cinema Raja கர்டூன்ல டினோசார் கூட சண்டை போடறமாதிரியும் படம் எடுக்கலாம் இதெல்லாம் ஒரிஜினல் ரஜினி படம் மாதிரி வருமா . . இப்படி எல்லாம் படம் நடிக்கறதுக்கு தலைவா பேசாம நீங்க ரிடையர் ஆகிடுங்க
Rate this:
chockalingam - thirupputhur,இந்தியா
26 ஜூன், 2013 - 10:17 Report Abuse
chockalingam சுறா எல்லாம் ஜுஜுபி பிளாஸ்டிக் சுறாவா ரப்பர் சுறாவா?
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
26 ஜூன், 2013 - 10:04 Report Abuse
Vaal Payyan பார்த்து தலைவா படம் சுறா மாதிரி இருக்காம பார்த்துக்கங்க .....
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in