பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் குட்டை பாவாடை, பிகினி கலாசாராம் என்றெல்லாம் கட்டவிழ்த்து விட்ட நமீதாவுக்கு போதாத நேரம் போலிருக்கு. அதனால்தான் அவர் எந்த அளவுக்கு இறங்கி நடிக்க தயாராக இருந்தும் துக்கடா வேடங்களை அவருக்கு கொடுக்கக்கூட கோடம்பாக்கத்தில் எந்த புண்ணியவான்களும் முன்வரவில்லை. இதனால் தனது பெரிய உடம்பு, பெரிய திரைக்காரர்களுக்கு வேண்டாததாகி விட்டது என்று இப்போது சின்னத்திரை பக்கம் தலை காட்டி வருகிறார்.
ஆனால், கோலிவுட்டில் வேலை வெட்டி இல்லாமல், சதா வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்து பார்த்து அவருக்கு செம போரடித்து விட்டதாம். அதனால் அடிக்கடி மும்பைக்கும், சில வெளிநாடுகளுக்கும் எஸ்கேப்பாகி வருகிறார் நமீதா. அப்படி அங்கு செல்லும்போது, சென்னையில் வீதிகளில் செல்வது போல் உடம்பை கவர் பண்ணி செல்லாமல் பிகினி உடையணிந்து ஹாயாக காத்தாட திரிகிறாராம் நமீதா.
வெளிநாடுகளுக்கு சென்றாலும் இதே நிலைதானாம். ஆனால் அங்கெல்லாம் யாரும் நமீதாவை உரித்து உரித்து பார்ப்பதில்லையாம். இவரே உரிச்ச கோழியாட்டம் சாலையில் நடந்து சென்றாலும் கண்டுகொள்ள நாதியில்லையாம். அதனால், தனது கவர்ச்சிக்கு இவ்வளவுதான் மரியாதையா? என்று புலம்பத் தொடங்கியிருக்கும் நமீதா, மும்பையில் நான் குடியிருக்கும் அம்பிலேலி பகுதிக்கு தமிழ்நாட்டு மச்சான்ஸ் வந்தால், என்னை இதுவரை பார்த்திராத கிளுகிளு உடையில் பார்த்து ரசிக்கலாம் என்றும் அறிவிப்பு விட்டுள்ளார். அதேசமயம், என் அழகில் நீங்க மயங்கி விழுந்து கிடந்தால் அதற்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பில்லை என்றும் கிண்டல் செய்துள்ளார் நமீதா.
உங்க அழகில மயங்கி விழுந்திருவாங்கன்னு சொல்றதே கிண்டல்தானே நமீ...,!