Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட்டில் படம் இயக்குகிறார் பி.வாசு!!

17 ஜூன், 2013 - 17:19 IST
எழுத்தின் அளவு:

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் பி.வாசு, ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார். தனது முதல்படத்தையே த்ரில்லிங்கான பேய் படமாக உருவாக்குகிறார். பணக்காரன், உழைப்பாளி, சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது முதன்முதலாக ஹாலிவுட்டில் ஒரு படம் இயக்க உள்ளார். படத்திற்கு "கரி இன் லவ்" என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வாசு கூறியதாவது, நான் புதிய படத்துக்கான கதை‌ விவாதத்தில் இருந்தபோது, அமெரிக்க வாழ் தமிழர் ராஜ்திருச்செல்வம் என்பவர் என்னிடம் பேசினார். அப்போது தங்களது சந்திரமுகி படத்தை பார்த்தேன், அதேப்போன்று பேய் படம் ஒன்றை ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளேன், அப்படத்தை நீங்கள் டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். திருச்செல்வம் சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது, விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த கதை. இயற்கையை நாம் எவ்வளவு பாழ்படுத்துகிறோம்..? , அதனால் பூமாதேவி எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறாள் என்பதை ஆன்மீகம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் போன்றவை கலந்த ஜனரஞ்சகப் படைப்பாக இப்படத்தை எடுக்க உள்ளோம். காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் மற்றும் த்ரில்லிங்காக படம் கொடுக்கப் போகிறோம். ஹாலிவுட் படம் என்றாலும் நம்மூர் ஸ்டைலில் பாட்டும் இருக்கும்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் அனில் கபூர், ஹாலிவுட் நடிகர் ஜான் ஒயிட் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹீரோவுக்கான தேர்வு நடக்கிறது என்றார்.

இதனிடையே இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

பூபதி - pothatturpet  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2013 - 00:21 Report Abuse
பூபதி p.வாசு சார். விஜய்க்கு நடிக்க தெரியுமா ? வேற ஆளு கிடைக்கலயா? தயவுசெய்து வேண்டாம் விஜய்.
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
20 ஜூன், 2013 - 12:03Report Abuse
saravanakumarபூபதி உனக்கு முதல்ல நடிக்க தெரியுமா நீ ஒரு ஆளுன்னு விஜய் பத்தி பேசுற...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
18 ஜூன், 2013 - 10:22 Report Abuse
Angry ஜெய் செத்தாண்டா வெள்ளைக்காரன்
Rate this:
18 ஜூன், 2013 - 09:33 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) ஆமா...வாசு படத்துல "மாசு" (mass நு நெனைக்காதீங்க )
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
19 ஜூன், 2013 - 11:52Report Abuse
saravanakumarமாசு நீ தான்டா மாங்கா மடையா...
Rate this:
Madhan - chennai,இந்தியா
18 ஜூன், 2013 - 06:40 Report Abuse
Madhan விஜய் இஸ் மாஸ் விஜய் மாத்ரி யாருள்ளும் நடிக்க முடியாது
Rate this:
18 ஜூன், 2013 - 14:30Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven))ஆமா...ஆமா...கண்டிப்பா எவனாலும் நடிக்க முடியாது...நடிப்புக்கு இலக்கணம் அவர்.......சிவாஜி,M .R .ராதா எல்லாம் இருந்துருந்தால் ...விஜய் நடிப்பை பார்த்து ..கூனி குறுகி போய் இருப்பார்கள்...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
19 ஜூன், 2013 - 11:51Report Abuse
saravanakumarஅஜித் தொப்பைய காட்டி சாவடிகிறான், குள்ளன் சூர்யாவோ செக்ஸ் படத்துல வர்ற மாதிரி எப்ப பார்த்தாலும் உடம்ப காட்டிகிட்டு இருக்கான். இவங்க நடிப்ப பாத்து தான் சிவாஜி வருத்தபடுவாறு. once more படத்திலேயே சிவாஜி கூட நடிச்சு அவர் கிட்டயே நல்ல நடிகன் என்று பேர் எடுத்தவர்டா தளபதி...
Rate this:
sekar - nagari,இந்தியா
17 ஜூன், 2013 - 22:03 Report Abuse
sekar விஜய் the mass
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in