Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் மருமகன் என்பதால் ப்ளசும் இல்லை, மைனசும் இல்லை! சொல்கிறார் தனுஷ்

17 ஜூன், 2013 - 10:39 IST
எழுத்தின் அளவு:

  நடிகர் தனுஷ் ரஜினியின் மருமகனானபோது, அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு ரசிகர்களால் பேசப்பட்டவர். ஆனால், தனுசுக்கு அந்த பட்டத்தின் மீது ஈர்ப்பு இல்லை. சூபபர் ஸ்டார் என்பது ரஜினி சார் கஷ்டப்பட்டதற்கு பலனாக கிடைத்தது. அதை எளிதில் நான் எனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது நியாயமில்லை என்று அதை தவிர்த்தார்.

மேலும், அவரிடம் ரஜினி சார் நடித்த படங்களில் நடிப்பீர்களா? அவர் நடித்தது மாதிரி நடிப்பீர்களா? என்று மீடியா சார்பில் அவரை நோக்கி அவ்வப்போது கேள்விகள் பாய்ந்து வருகின்றன. ஆனால், அதற்கு ஆரம்பத்திலிருந்தே, ரஜினி சார் ரொம்ப பெரிய நடிகர். அதனால் அவருடன் என்னை யாரும் ஒப்பிடாதீர்கள். மேலும், அவர் நடித்த படங்களில் நான் நடிப்பது இப்போது சாத்தியமில்லை என்றும் பதிலளித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது ராஞ்சனா படம் சம்பந்தமாக மும்பையில் முகாமிட்டுள்ள தனுசிடம், ரஜினியின் மருமகன் என்பது உங்களுக்கு எந்த வகையில் ப்ளசாக உள்ளது என்று நிருபர்கள் கேட்டபோது, ரஜினியின் மருமகன் என்பதால் எனக்கு எந்தவித ப்ளஸோ, மைனஸோ கிடையாது என்று கூறியுள்ள தனுஷ், அவர் எப்படி அவரது வேலையை செய்து கொண்டிருக்கிறாரோ, அதேபோல் நானும் வழக்கம்போல் எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன். மேலும், நாங்கள் இருவருமே எங்களது வேலைகளில் பிசியாக இருப்பதால் எனது ராஞ்சனா படம் பற்றிகூட எனது மாமனாரிடம் இதுவரை பேசிக்கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Sakthi - Puducherry,இந்தியா
14 ஜூலை, 2013 - 17:31 Report Abuse
Sakthi தலைவா நான் உங்களோட தீவிர ரசிகன். அதற்கு காரணம் எங்கள் "SUPER STAR". So, எங்க "SUPER STAR" உங்களுக்கு 100% "+++++++". இந்த உண்மைய நீங்க ஒத்துகிட்டு தான் ஆகனும்.
Rate this:
Arun Rollno Six - Bedok,சிங்கப்பூர்
18 ஜூன், 2013 - 14:33 Report Abuse
Arun Rollno Six dhanush is a good actor and the gd human being. he succeed b'se of his hard work. if rajni has a son, he also has to work hard. otherwise he can't win.
Rate this:
ANAND S B - bangalore,இந்தியா
18 ஜூன், 2013 - 11:27 Report Abuse
ANAND S B ரஜினி இன் மருமகன் , அதனால் எத்தனையோ பிளஸ் உங்களுக்கு , அவர் பெயர் இல்லையனில் நீங்கள் சாதித்து இருப்பீர்கள் , அனால் இந்த அளவுக்கு பெயரும் புகழும் கிடைத்து இருக்காது
Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
18 ஜூன், 2013 - 11:07 Report Abuse
S Rama(samy)murthy ஒரு சாயலில் திரு அமிர்தாப் நடிப்பை பின் பற்றுவதாக தெரிகிறது. இயல்பான நடிப்பு .முன்னேற நல்ல வாய்ப்பு .சுப ராம காரைக்குடி
Rate this:
pasupathi - muscat,ஓமன்
18 ஜூன், 2013 - 10:47 Report Abuse
pasupathi இவர் முழுமுதல் காரணம் செல்வரகாவந்தான் ...(துள்ளுவதோ இளமை , காதல் கொண்டேன் )
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in