Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமாவும், ரேடியோவும் இல்லை என்றால் சர்க்கசில் ஜோக்கர் வேலை பார்த்திருப்பேன்: - மிர்ச்சி சிவா

13 ஜூன், 2013 - 02:51 IST
எழுத்தின் அளவு:

   சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. தொடர்ந்து "சரோஜா", "தமிழ்ப்படம்", "வ குவாட்டர் கட்டிங்", "கலகலப்பு" போன்ற காமெடி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்துள்ளார். தற்போது ரஜினி நடித்த "தில்லு முல்லு" படத்தின் ரீ-மேக்கில் நடித்துள்ள சிவா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

1.சிவா  எப்போ  சீரியசா  நடிக்கப் போறீங்க ?

எனக்கு  தெரிஞ்சு எந்த  ஒரு   வேலையையும்  சீரியசா பண்ணா அவ்ளோ நல்லா வருமான்னு  தெரியல, நாமளே ஒரு வேலைய  என்ஜாய் பன்னலண்ணா மக்கள்
எப்படி ரசிப்பாங்க. கமல் சார் கிட்ட ஒரு விஷயம் கேட்டா அவர் சொல்லும் பதிலில் அவ்ளோ நகைச்சுவை தெரியும். நான்  இப்படி நிறைய கத்துகிட்டேன். எந்த இடத்தில் சீரியஸா இருக்கணுமோ  அங்க  சீரியஸ்  ஆகிடுவேன் , விளையாட்டு விளையாட்டா  இருக்கனும்.

2. உங்களை படங்களில் ஒரே மாதிரி நடிப்பை பார்க்க வேண்டி இருக்கே ?

சென்னை 28, சரோஜா, தமிழ் படம், வ குவாட்டர் கட்டிங் , பதினாறு, கலகலப்பு இதான் என் வரலாறு. என் படங்கள் எதுவுமே நாட்டை காப்பாத்தவோ, தீவிரவாதிகளை அடிச்சி இழுத்து கூப்பிட்டு வர மாதிரியோ படங்கள் இல்லை.எ ன் படங்கள் எல்லாமே ஒரு ஜாலி படங்கள். மக்கள் அதை ரசிக்கறாங்க, சிரிக்கறாங்க.


3. ஒரு ஆக்ஷன் மாஸ் ஹீரோ கதை பண்ண உங்களுக்கு ஆசை இல்லையா ?

தினமலர் மூலமா  சொல்றேன், ஒரு நல்ல ஆக்ஷன் கதை, ஒரு சேலஞ் கதை பண்ண நான் ரெடி. கதை சொல்ல வரும் போதே சார் ஒரு ஜாலியான கதை, கொஞ்சம் பொய் பேசணும், ஏமாத்தணும், இப்படித்தான் சொல்ல வராங்க. அப்படியே வர்றீங்க. உங்க ரோல் ரொம்ப சூப்பரா வரும்னு சொன்னா நான் எந்த முடிவு எடுப்பது சொல்லுங்க.


4. இப்பவும் ரேடியோல வேலை பார்க்கறீங்களா ?

ஆமாம், ஒரு படம் ஆரம்பித்து, முடித்து வெளியாக 7,8 மாதம் ஆகும். நான் மக்கள்கிட்ட பேசி  பழக்கப்பட்டவன். ரொம்ப இடைவெளி வந்து, ஏதாச்சும் பேசநினைத்தா, நேரா
ரேடியோல மைக் ஆன் பண்ணி 2,3 மணி நேரம் ஜாலியா பேசுவேன். பேச ஒன்னும் இல்லை  என்றாலும், உங்களுக்கு  வெயிலுக்கு டிப்ஸ் தரேன், வீட்டை விட்டு வெளில
வராதீங்க. முக்கியமா குளிக்காதீங்கனு ஏதும் மொக்கையா கூட பேசி சிரிக்க வச்சிடுவேன். என் வாழ்க்கையில் சினிமாவும், ரேடியோவும் இல்லன்னா, சர்கஸ்ல ஜோக்கர் வேலை பார்த்து எப்பவும் மக்களை சிரிக்க வச்சிருப்பேன்.


5. உங்களுக்கு படம் இயக்க ஆசைப்பட்டு, ஸ்கிரிப்ட் கூட ரெடி பண்ணிணீங்களே, என்ன ஆச்சு ?

ஸ்கிரிப்ட் பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு பிடிச்ச மாதிரி படம் பண்ணனும். அதுக்கு இப்ப டைம் இல்லை. 4 படம் கையில் இருக்கு. தில்லு முல்லு, சொன்னா புரியாது, வணக்கம் சென்னை, யா யா. இபோதைக்கு நடிப்பில் பிஸி. இதெல்லாம் முடிச்சிட்டு, அப்புறம்  இயக்கத்தை பார்த்துக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.

6. சினிமாவுக்கு  வந்து  ஆறு  வருஷம் ஆச்சு, ஓரளவு சம்பாதிச்சுட்டீங்களா ?

அதை ஏன் கேக்குறீங்க, இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கேன். நான் தான் வாடகை கொடுக்கணும். நம்புங்க. சம்பாரிச்சது அவ்ளோவா இல்லை. ஆனா செலவு நிறைய இருக்கு. ஏதும் பிளான் பண்ணல. இன்னிக்கு நைட் என்ன சாப்பிடலாம், இதான் இப்போதைய பிளான். தில்லு முள்ளு படத்துக்கு பிறகு தான் கொஞ்சம் சேமிப்பு பத்தி எல்லாம் யோசிக்கணும்.

7. ரொம்ப பொய் பேசுவீங்களோ ?

எனக்கு அப்படி டக்குனு பொய் பேச வராது. ஏன்னா என் மூஞ்சியே காட்டி கொடுத்திடும். அதனால பொய்ய கூட நான் சீரியஸா உண்மையா பேசிருக்கேன். நான் பரிச்ச எழுதும்போதும் காப்பி அடிக்க மாட்டேன். சுமாரா எழுதுவேன். ஆனா வெளில வந்து சூப்பரா எழுதினேன்னு சொல்வேன். ரிசல்ட் வந்தா அப்ப தான் தெரியும், நம்ம பேச்சு. பொய்  சொன்னா சாமி கண்ண குத்தும்னு வேற சொல்றாங்க. அதனால இனி பொய் எல்லாம் பேசமாட்டேங்க.

8. சிவா எப்ப ஷங்கர், மணிரத்னம், கெளதம் மேனன் படங்களில் நடிக்கப் போறீங்க ?

இப்போதைக்கு ஆசை இல்லை. எப்பவுமே பெரிய இயக்குனர்களை நான் துரத்துவது இல்லை. கதைக்கு நான் வேணுன்னா அவங்களே கூப்பிடுவாங்க. நான் என் நேரத்தை இனி வீணாக்க விரும்பல. சென்னை 28  புது இயக்குனர், தமிழ் படம் புது இயக்குனர், என் படங்கள் அதிகமா புது இயக்குனர்கள்தான். இது எனக்கு செட் ஆயிடுச்சு.

9. உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாரு ?

எனக்கு சாவித்திரி மேடம் பிடிக்கும். இப்ப கத்ரினா கைப் பிடிக்கும். இப்ப நான் நடிக்கிற 4 படங்களில் 4 ஹீரோயின்கள், நல்லா போயிட்டிருக்கு. ஒன்னும் பிரச்னை இல்லை.


10. சரி பிஸியான நடிகர் ஆயிட்டீங்க, எப்ப டான்ஸ் கத்துக்க போறீங்க ?

டான்ஸ், பைட் கத்துக்கிற ஐடியா இப்போ இல்ல. இப்ப நான் போடும் ஸ்டெப்ஸ் ஓகே பண்றாங்க. தமிழ் படம்ல நான் ஆடின ஓம க சீயா பாட்டில், என் டான்ச அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டாங்க. இருந்தாலும் எனக்குள்ள ஒரு டான்ஸ் படம் பண்ண ஆசை இருக்கு.


11. எதை நீங்க மாத்திக்க விரும்புறீங்க ?

எனக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கு. அதை கொஞ்சம் மாத்திக்கணும். கலகலப்பு படத்தில் நான் ஒரு டயலாக் சொல்வேன். எனக்கு யார் வேலை செய்தாலும் பிடிக்காதுன்னு. அதை சொல்லும்போது தியேட்டர்ல கை தட்டுறாங்க. அப்ப யாருக்கும் எந்த வேலையும் செய்ய பிடிக்கலங்கறது தெரியுது. ஜாலியா இருக்கனும், ஆனா சீரியஸா யோசித்தா கொஞ்சம் வேலையும் பார்க்கணும்.

12. இப்ப பார்ட்டிக்கு போயிட்டு இருக்கீங்களா ?

நான் எங்க இருந்தாலும் அங்க பார்ட்டி தான். ஒரு டீ கடையில் இருந்தால் கூட அங்கயும் பார்ட்டிதான். ஆனா இப்போ எங்கும் போறதில்ல. என் பிரண்ட்ஸ் கூட கோவத்தில் இருக்காங்க. ஒருத்தன் குடிச்சிட்டு உளறுறான் என்றால், நான் குடிக்காமலே உளறுவேன். அப்புறம் கொஞ்சம் உணருவேன். வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் பண்ணனும். கொஞ்சம் பொறுப்பானவனா, முடிந்த வரை மாற ஆசைப் படறேன்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
13 ஜூன், 2013 - 17:22 Report Abuse
kumaresan.m டேன்சு மற்றும் சண்டை கற்றுகொள்வதிற்க்கு பதிலாக முதலில் நடிப்பை கற்றுக்கொள்ளுங்கள் "
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13 ஜூன், 2013 - 17:20 Report Abuse
kumaresan.m " என்னய்யா 4 படங்களுக்கு மேல் நடித்து விட்டு இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொன்னால் நம்புவது போல் இல்லையே ....பொய் பேசுவேன் என்று சொல்லி விட்டு ஓவரா பொய் சொல்லிறீங்களே தம்பி "
Rate this:
rameshprabhurpr - erode,இந்தியா
13 ஜூன், 2013 - 15:12 Report Abuse
rameshprabhurpr வெரி குட் சிவா ...ஆல் தி பெஸ்ட் ... you are one the my favorite hero....i very very like ur comedy....
Rate this:
adenois Sen - mathurai ,இந்தியா
13 ஜூன், 2013 - 11:56 Report Abuse
adenois Sen இவன் ஒரு மொக்க பீசு
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
13 ஜூன், 2013 - 09:51 Report Abuse
Angry ஜெய் ரொம்ப நடிக்காதடா டேய் ..... நீ பண்ணாத அட்டூழியமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in