'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"அழகி, சிலந்தி படங்களில் நடித்த மோனிகா, தற்போது, சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும், மெகா படங்களில் நடிக்க, கடும் முயற்சி எடுத்தார். இதையடுத்து, அவருக்கு, "நினைத்தது யாரோ, ஜன்னல் ஓரம் ஆகிய படங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த படங்களில் மோனிகாவுக்கு கதாநாயகி வேடமில்லையாம். கெஸ்ட் ரோலாம்.இதுபற்றி மோனிகா கூறுகையில், "இந்த படங்களில் ஹீரோயின் வேடத்துக்கு தான், முயற்சி செய்தேன். ஆனால், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கெஸ்ட் ரோல் உள்ளது. நடித்தால், நல்ல பெயர் கிடைக்கும் என்று அப்படங்களின் இயக்குனர்கள் கூறியதால், "ஓ.கே சொல்லிவிட்டேன் என்கிறார். "நான் எதிர்பார்க்கும் கதாநாயகி வேடம் கிடைக்காதது வருத்தமளித்தாலும், கிடைக்கிற வாய்ப்புகளை கொண்டு, என்னை நிரூபிக்க தயாராகிவிட்டேன் என்கிறார்.