சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
பாலிவுட்தான் எனது இலக்கு. அடுத்த ஆண்டு இந்நேரம் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வருவது நிச்சயம் என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி ராய். தற்போது மலையாளத்தில் இவ்விடம் சொர்க்கமான.. என்ற படத்தில் மோகன்லாலுடன் ஜோடி போட்டு நடித்து வரும் லட்சுமிராய் கூறுகையில், தமிழில் நான் நடித்து வந்த நான் அவனில்லை 2ம்பாகம், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களை முடித்து விட்டேன். ஒரு சின்ன பிரேக் கொடுத்து விட்டு தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்குள் பாலிவுட் பக்கம் போய்விட வேண்டும். பாலிவுட்தான் எனது இலக்கு... லட்சியம் எல்லாமே. அடுத்த ஆண்டு இதே நேரம் நான் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பேன், என்றார். 68 கிலோ ஐஸ்கிரீமாக வலம் வந்த லட்சுமி ராய், கடுமையான டயட் மூலம் 5 கிலோ குறைத்து, 63 கிலோ ஜிகர்தண்டாவாக சுற்றி வருகிறார் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.