மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார். கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி லலிதா குமாரி. கே.பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் நாயகியாக நடித்தவர் லலிதா குமாரி. இவருக்கும், நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க லலிதாகுமாரி முன் வந்துள்ளார். செல்வா இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கும் முறியடி படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கப் போகிறாராம் லலிதா குமாரி. இதுபற்றி அவர் கூறுகையில், மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைவது சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன், என்றார்.