ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"சிந்து சமவெளி படத்தில், எக்குத் தப்பான கேரக்டரில் அறிமுகமாகி, பெண்களிடமிருந்து வாங்கி கட்டி கொண்டவர், அமலா பால். ஆனாலும், "மைனா படம், அவருக்கு மறு வாழ்வு தந்தது. இதனால், "கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற படங்களில், இனி ஒருபோதும் நடிக்க மாட்டேன் என, சத்தியம் செய்த அமலா பால், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார்.
தெலுங்கில், கிளாமர் காட்டமாட்டேன் என, ஆரம்பத்தில் பிகு காட்டினார், அமலா பால். ஆனால், "ஆந்திராவில், அப்படியெல்லாம், இருந்தால் வேலைக்கு ஆகாது என, அவருக்கு புரியவைத்து விட்டனர். இதனால், தற்போது, தமன்னா ரேஞ்சுக்கு, அதிரடி கவர்ச்சி மேளாவை, தெலுங்கில் அரங்கேற்றி வருகிறார். அமலா பால் அளித்துள்ள ஒரு பேட்டியில்,"எந்தவிதமான கமர்சியல் படங்களிலும், நடிக்க தயார். கிளாமரான கேரக்டராக இருந்தாலும், பிரச்னையில்லை. ஒரு ஹீரோயின், மூன்று ஹீரோயின் கதையாக இருந்தாலும், பரவாயில்லை. கலாசாரத்துக்கு விரோதமான கேரக்டர்களை தவிர, மற்ற கேரக்டர்களில் நடிக்க, எப்பவுமே நான் ரெடி என, கூறியுள்ளார்.