Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்

22 மே, 2013 - 16:04 IST
எழுத்தின் அளவு:

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து இப்போது பாரதிராஜா, விஜய் போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகியிருக்கும் அவர் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். இந்த நிலையில், பாடகி சைந்தவியை ஜூன் 27-ந்தேதி சென்னையில் திருமணம் செய்து கொள்கிறார்.

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் பள்ளியில் படிக்கிற காலத்தில் இருந்தே நண்பர்களாம். இந்த நிலையில், ஜிவி.யின் இசையில் சைந்தவி பின்னணி பாடி வந்தபோது அவர்களது நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதுபற்றி இருவரும் வீட்டில் சொன்னபோது, அவர்களது திருமணத்துக்கும் சம்மதம் சொன்னார்களாம். அதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு அவர்களது நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு இப்போது உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதில் ஜி.வி.பிரகாசும், சைந்தவையும் இறங்கியுள்ளனர். முன்னதாக, முதல்வர் ஜெயலலிதாவை குடும்பத்தாருடன் சந்தித்து முதல் அழைப்பிதழை கொடுத்துள்ளனர். இதையடுத்து மணமக்களை மனதார வாழ்த்தி அனுப்பியுள்ளாராம் முதல்வர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

p.saravanan - tirupur,இந்தியா
23 மே, 2013 - 14:41 Report Abuse
p.saravanan காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் பழக்கும் தமிழக கலாசார பண்பாட்டில் உள்ளது .அதுவும் மணமக்கள் பெரியோர்களிடம் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள் .மணமக்கள் தமிழக முதல்வர் காலில் விழுந்து ஆசி வாங்குவது தவறு ஒன்றும் இல்லையே , ஜெய் அவர்களே . நீங்கள் தமிழ்நாட்டில் இருகிறீர்களா , இல்லை வெளிநாட்டில் வாழ்கிறீர்களா
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
24 மே, 2013 - 13:49Report Abuse
Arumugamஅவர் கேட்டது, குடும்பத்தோடு காலில் விழுந்தார்களா என்பதுதான். ஓடுகின்ற வண்டியில் ஏறுவதுதான் சினிமாக்காரர்களின் தொழில்....
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 மே, 2013 - 19:05 Report Abuse
Angry ஜெய் கால்ல விழலையா ?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24 மே, 2013 - 17:30Report Abuse
சு கனகராஜ் பெரியவர்கள் காலில் விழுவது ஆசிர்வாதம் வாங்குவது தப்பில்லையே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in