தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சென்னை 28, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பிரபல திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகளான இவர் விரைவில் கல்யாணம் செய்யப்போகிறார் என்ற செய்தி சமீப காலமாக கோலிவுட்டை சுற்றி வந்தாலும் 2 வதந்திகளும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று... டைரக்டர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் நடிகருமான கிருஷ்ணாவுடன் விஜயலட்சுமி அடிக்கி டேட்டிங் செல்வதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஜோடி கற்றது களவு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறது. இதேபோல நடிகர் ஜெய்யும், விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியும் கசிந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி இருவரில் யாரிடம் கேட்டாலும் நாங்க பிரண்ட்லியாத்தான் பழகுறோம்... என்ற ஒற்றை வரி பதிலையே சொல்கிறார்கள்.