ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
"கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ரெஜினா. ஆனால், ஏற்கனவே, "கண்ட நாள் முதல் உட்பட ஓரிரு படங்களில் தமிழில் நடித்த ரெஜினா, பின், "சிவா மனசுல சக்தி படத்தின், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து, ஒரே படத்தில் பிரபலமாகி விட்டார். அத்துடன், அடுத்தடுத்து, அங்கு ஹிட் படங்களாக அமைந்ததால், தமிழகத்தையே மறந்திருந்த ரெஜினாவை, டைரக்டர் பாண்டிராஜ் தான் மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வந்தார். ஒருவழியாக, இந்த முறை தமிழிலும் வெற்றி பெற்று விட்டார் ரெஜினா. இருப்பினும், புதிதாக படங்கள் தான் புக்காகவில்லை. "என்ன காரணம் என்று விசாரித்தால், கிளாமர் கதைகளே பிடிக்காத ரெஜினாவை, தேடி வந்ததெல்லாம், கிளாமர் கதைகள் தானாம். அதனால் தான், "நல்ல படம் கிடைக்கும் போது தமிழுக்கு வருகிறேன் என்று கூறி, மீண்டும் ஆந்திராவில் முகாம் போட்டுள்ளார் ரெஜினா.