சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
காஞ்சனாவுக்கு பிறகு லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால், தாய்மொழியான கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். என்றாலும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியே அவருக்கு இருப்பதால், பெங்களூர்வாசியான அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது 25வது பிறந்த நாளை மும்பை கடலின் நடுப்பகுதிக்கு சென்று கொண்டாட திட்டமிட்ட லட்சுமிராய், தனது குடும்பத்தாருடன் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். தனது 25வது பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடுக்கடலுக்குள் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவித்துள்ளார் லட்சுமிராய்.