தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மேல்தட்டு நடிகைகள் செய்யும் அலம்பல் காரணமாக சில படாதிபதிகள் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளனர். குறிப்பாக, காஜல்அகர்வால், ஹன்சிகா, அஞ்சலி, தமன்னா, அமலாபால் போன்ற நடிகைகளெல்லாம் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். இவர்களுக்காக படங்கள் ஓடுவதில்லை என்றாலும் படத்துக்குப்படம் உயர்த்திக்கொண்டே போவதோடு, படப்பிடிப்புகளில் ஒரு சின்ன வசதி குறைவு ஏற்பட்டாமல் பிரச்சினை செய்து விடுகிறார்கள்.
இதனால் இவ்வளவு காலமும் நடிகைகளின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இதையெல்லாம் சகித்துக்கொண்டு வந்த படாதிபதிகள், சமீபகாலமாக பிரச்சினை கொடுக்காத நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில் பிந்துமாதவிக்குப்பிறகு லட்சுமிமேனனும் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். கொடுத்ததை சாப்பிடுவது. தங்க சொன்ன இடத்தில் தங்குவது, கொடுத்த சம்பளத்தை வாங்குவது என்று இருப்பதால் இப்போது மீடியம் பட்ஜெட் படங்களை தயாரிப்பவர்கள் அவரை புக் பண்ணத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சூதுகவ்வும் படத்தையடுத்து, இதற்குதானா ஆசைபட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும், பத்மினியும் படங்களில் நடித்து வரும் விஜயசேதுபதி அடுத்து நடிக்கும் வசந்த குமரன் படத்திற்கு கும்கி லட்சுமிமேனனை புக் பண்ணியுள்ளனர்.