‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தான் நடிக்கும், ஒரு படத்துக்கு கூட ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லையே என்று, வருத்தப் பட்டுக் கொண்டிருந்த தனுசுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அவர் நடிக்கும், "மரியான், ராஞ்சனா என்ற இரண்டு படங்களுக்கும் இசையமைக்கிறார் ரகுமான். அத்துடன், அவரது "மரியான் படத்தில், மற்றொரு அற்புதமும் நடந்துள்ளது. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒரு பாடல்பாடியுள்ளார். இது, தனுஷ் எழுதிய பாடலாம். அதனால், தான் எழுதிய பாடல் மூலம், இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்திருப்பதை நினைத்து, பெருமைப்படும் அவர், "3 படத்துக்காக, நான் எழுதி பாடிய, "கொலவெறி பாடலைவிட, இப்பாடல் மிகப் பெரிய வெற்றி பெறும் என்கிறார்.