'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
மல்லிகா ஷெராவத் என்ற பெயரைக் கேட்டாலே, இளவட்டரசிகர்கள் அதிர்ந்து போய்விடுவர். அந்த அளவுக்கு, கிளாமர் நடிப்பில், ரசிகர்களை அலற வைத்து வந்த அவர், திடீரென, "இனி கிளாமராக நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.மல்லிகா ஷெராவத்தின் இந்த அறிவிப்பினால், பாலிவுட் அதிர்ச்சியடைந்துள்ளது. அவரது அபிமானிகள் சிலர், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, அவரை கேட்டு வருகின்றனர்.ஆனால் மல்லிகாவோ, "படத்துக்குப் படம், உடலைகாட்டி நடித்து, எனக்குள் இருந்த திறமையை பயன்படுத்தாமல் வீணடித்து விட்டேன். இனிமேல், திறமையை முழுவதுமாக பயன்படுத்தப்போகிறேன். என் திறமைக்கு, சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிப்பேன் என்று, கூறிவிட்டாராம்.