Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தில்லு முல்லுவுக்காக எம்.எஸ்.வி., உடன் ஆடி பாடிய யுவன் சங்கர் ராஜா!!

23 ஏப், 2013 - 17:52 IST
எழுத்தின் அளவு:

தில்லு முல்லு படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ஆடி பாடியபடி ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். ரஜினி நடிப்பில் 1980களில் வெளியான படம் தில்லு முல்லு. இப்படம், இப்போது சிவா நடிப்பில் அதே பெயரில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை பத்ரி இயக்க, வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

பழைய தில்லு முல்லு படத்தில் இடம்பெறும் "தில்லுமுல்லு தில்லுமுல்லு..." பாடலை இப்போது ரீமேக் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் பாடினார். அதை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் ஆக்கி நவீனப்படுத்தினார். இந்த பாடலை ஆல்பம் போல் உருவாக்குகின்றனர். இருவரும் சேர்ந்து இசையமைப்பது போலவும், ஆடி பாடியபடியும் இந்த பாடல் உருவாகிறது. இந்த நடன காட்சி சாலி கிராமத்தில் உள்ள பாலு மகேந்திரா ஸ்டூடியோவில் படமானது. எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன் சங்கர்ராஜாவும் கைகோர்த்து ஆட அவர்களுடன் நிறைய துணை நடிகர், நடிகைகளும் ஆடினார்கள்.

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா கூறும் போது, எனது தந்தையும் எம்.எஸ். விஸ்வநாதனும் இணைந்து சில படங்களுக்கு இசையமைத்துள்ளனர். நானும் அவருடன் இணைந்து இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று கூறியுள்ளார்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு இந்த ஒருபாடல் மட்டும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Chandrasekar Sekar - Chennai,இந்தியா
14 ஜூன், 2013 - 15:33 Report Abuse
Chandrasekar Sekar சூப்பர் கூட்டணி
Rate this:
Kumar Krish - Toronto,கனடா
01 மே, 2013 - 00:30 Report Abuse
Kumar Krish "ராகங்கள் பதினாறு" என்னும் அழகான தில்லு முல்லு படப் பாடல் எம்எஸ்வி - யுவன் இசைக்கூட்டணியில் இந்த மறுபதிவிலும் வரவேண்டும்.
Rate this:
periavannan - Kovai,இந்தியா
28 ஏப், 2013 - 19:55 Report Abuse
periavannan Generation Y பழைய தலை முறையுடன் சேருவது சந்தோசம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in