மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மணிவண்ணன் இயக்கியுள்ள 50 வது படம் நாகராஜசோழன் எம்.ஏ. எம்எல்ஏ. இந்த படத்தில் கோமால் ஷர்மா என்ற நடிகை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கணையான இவருக்கு நிஜத்தில் அசைவ உணவுகள் என்றால் ஆகவே ஆகாதாம். யாராவது அதைப்பற்றி பேசினாலே குமட்டிக்கொண்டு வர, அந்த இடத்தையே காலி பண்ணி விட்டு ஓடிவிடுவாராம்.
அப்படிப்பட்ட கோமால் ஷர்மா, நாகராஜசோழன் எம்.ஏ.எம்எல்ஏ படத்தில் அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக நடித்துள்ளார். பெற்றோருக்கு அடங்கிய பெண்ணாக நடித்திருந்தாலும், அநீதியைக்கண்டு வெகுண்டெழும் வீரத்தமிழ் பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.
அவரிடத்தில் தொடர்ந்து இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பீர்களா? என்று கேட்டால், அப்படியெல்லாம் எந்த சட்டதிட்டமும் கிடையாது. கதை கிளாமராக இருந்தால் பக்கா கிளாமர் நாயகியாகவும் மாறி விடுவேன். என்னதான் நிஜத்தில் நான் சைவ பெண்ணாக இருந்தாலும் சினிமா என்று வருகிறபோது ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக இருக்க வேண்டும் என்பதால், நடிப்பில் அசைவத்தை கடைபிடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளேன் எனகிறார் கோமால் ஷர்மா.