ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நீண்ட இடைவெளிக்கு பின், "555 என்ற படத்தில் நடிக்கிறார், பரத். இந்த படத்தில், மூன்று விதமான, வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த தனுஷ், "இந்த படத்தில் இடம் பெற்றுள்ள, பரத்தின் போட்டோக்களைப் பார்த்து, அசந்து விட்டேன். ஒவ்வொரு கெட்டப்புக்காகவும், அவர் எந்த அளவுக்கு சிரமப்பட்டு, உழைத்துள்ளார் என்பது,போட்டோக்களை பார்த்தபோது தெரிந்தது. இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனால், பரத் அளவுக்கெல்லாம், சத்தியமாக, என்னால், சிரமப்பட்டு நடித்திருக்க முடியாது. முயற்சி மெய்வருத்த கூலி தரும்ன்னு சொல்வாங்க. மெய் வருத்தியிருக்கிறார் பரத்.அது கண்டிப்பாக, அவருக்கு கூலியைகொடுக்கும் என்றார்.