Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ரேவதி - சுரேஷ் மேனன் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்!!

22 ஏப்,2013 - 16:36 IST
எழுத்தின் அளவு:

 நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். "மண் வாசனை படத்தின் மூலம், தமிழ் திரை உலகில், அறிமுகமானவர், நடிகை ரேவதி. அதன்பின், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். ஒருமுறை, தேர்தலிலும் போட்டியிட்டார். சமூகப் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருபவர். இவருக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனன் என்பவருக்கும், 1986ல், திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, புதியமுகம் எனும் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்-6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை, இன்று ஏப்ரல் 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
இந்திய ஹீரோக்களில் பிடித்தமானவர் அஜீத்! - நீத்து சந்திராஇந்திய ஹீரோக்களில் பிடித்தமானவர் ... கோச்சடையானின் புதிய ஸ்டில் வெளியீடு கோச்சடையானின் புதிய ஸ்டில் வெளியீடு

வாசகர் கருத்து

Kavee - Jeddah,சவுதி அரேபியா
27 ஜூலை,2013 - 17:20
Kavee இவர்கள் இவ்ளோ நாள் இணைந்து வாழ்த்தே சாதனை ,,,அதற்க்கு ஒரு விழா எடுத்து இருக்கலாம்.
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப்,2013 - 09:12
arun கொழுப்பு
Queen - chennai,இந்தியா
23 ஏப்,2013 - 07:44
Queen நல்ல முடிவு குடும்ப வாழ்வில் வெற்றி என்பது சகித்து கொண்டு வாழ்வதில் இல்லை
umarfarook - dindigul,இந்தியா
22 ஏப்,2013 - 20:52
umarfarook ம்ம் எம் ஜி ஆர் ஆட்சியில் திருமணம் , ஜெ ஆட்சியில் விவாகரத்து
Karthikm - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப்,2013 - 19:40
Karthikm என்னது! இந்தி்ராகாந்தி்ய சுட்டுட்டாங்களா!
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22 ஏப்,2013 - 19:02
kumaresan.m " ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால் இது போன்ற பிரிவு வர வாய்ப்புகள் குறைவு ......விவரம் தெரியாத பாமர மக்கள் பாசத்துடன் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் ஆனால் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி ?
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
22 ஏப்,2013 - 18:46
T.C.MAHENDRAN படங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்ற நடிகை ரேவதிக்கு தன் சொந்த வாழ்க்கையில் இப்படி ஒரு முடிவா ?.
HARINARAYANAN - Chennai,இந்தியா
22 ஏப்,2013 - 17:40
HARINARAYANAN பெண்ணியம், பெண் சுதந்திரம் பேசும் பெண்கள் எல்லோரும் குடும்ப வாழ்வில் படு தோல்வியைத்தழுவுகிரார்களே...... இது அவர்களின் தனிப்பட்ட குறைபாட்டாலா? .... இல்லை பெண்ணிய சிந்தனையின் குறைபாட்டாலா? ..... ஏனென்றால் இந்த பெண்கள் எல்லாருடைய துணையும் கேட்டவர்கள்.... அதனால்தான் இந்த தோல்விகள் என்று எப்படி கூறமுடியும்? ....... எங்கேயோ உதைக்குதில்ல..........
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப்,2013 - 17:10
Angry ஜெய் ஒரு தென்றல் புயலாகி வருதே ........ இனிமே நீ எல்லாம் கருத்து சொல்லுற மாதிரி நடிக்கவோ , படம் எடுக்கவோ செய்யாதே .......
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mapla Singam
    Tamil New Film Maari
    • மாரி
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Karai Oram
    • கரை ஓரம்
    • நடிகர் : கணேஷ் பிரசாத்
    • நடிகை : நிகிஷா படேல்
    • இயக்குனர் :ஜே.கே.
    Tamil New Film Bahubali
    • பாகுபலி
    • நடிகர் : பிரபாஸ் ,701
    • நடிகை : அனுஷ்கா ,12
    • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in