ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நீத்து சந்திரா. அதன்பின் யுத்தம் செய் படத்தில் அமீருடன் குத்தாட்டம் போட்டவர், அடுத்து அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி போட்டார். தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவேன் என்று பெரிதும் எதிர்பார்த்தவர் இப்போது பட வாய்ப்பு இன்றி இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது, அதை ஏற்க முடியவில்லை என்றும், அஜீத்துடன் நடிக்க காத்திருக்கிறேன் என்றும், இந்திய சினிமாக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அஜீத் தான் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ் ரசிகர்கள் மிகுந்த பாசமானவர்கள், தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஸ்டார்களை எந்தளவு கொண்டாடுகின்றனர் என்பதை இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.