Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 கிலோ எடையை குறைக்க விக்ரம் சீனா பயணம்!

21 ஏப்,2013 - 17:41 IST
எழுத்தின் அளவு:

அந்நியனைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஐ. இந்த படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு பருமனான மற்றும் உடல் மெலிந்த என இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் விக்ரம். அதாவது அந்நியனில் அம்பி, அந்நியன் என இரண்டுவிதமாக நடித்தது போன்று இந்த படத்திலும் தோன்றுகிறாராம்.

அதனால் முதலில் உடல் பருமனான விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்ட ஷங்கர்,  இப்போது உடல் மெலிந்த விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்க களமிறங்கியிருக்கிறார். ஆனால், ஏற்கனவே விக்ரம் 8 கிலோ உடல் எடையை குறைத்து வந்தபோதும், அது போதுமானதாக இல்லையாம். அதனால் இன்னும் 5 கிலோ குறைக்க வேண்டும் என்றாராம். ஆனால், இன்னும் 5 கிலோ குறைக்க வேண்டுமென்றால் நாட்கள் அதிகமாக பிடிக்குமே என்று யோசித்த விக்ரம்.  இப்போது சீனா சென்றுள்ளார். அங்குள்ள சில அதிநவீன கருவிகள் மூலம் அவரது உடல் எடையை குறைக்கிறார்களாம். அதனால் விக்ரம் வரும் வரைக்கும் ஐ படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை! ஆவேசத்தில் கோடம்பாக்கம்!!பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை! ... நயன்தாரா பெற்ற நந்தி விருது! நயன்தாரா பெற்ற நந்தி விருது!

வாசகர் கருத்து ()

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sagaaptham
    • சகாப்தம்
    • நடிகர் : சண்முக பாண்டியன்
    • நடிகை : நேகா ஹிங்ச்
    • இயக்குனர் :சந்தோஷ்குமார் ராஜன்
    Tamil New Film Ilakkanam Illatha Kadhal
    Tamil New Film Ennai Arindhal
    Tamil New Film Lodukku pandi

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in