Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை! ஆவேசத்தில் கோடம்பாக்கம்!!

21 ஏப், 2013 - 16:32 IST
எழுத்தின் அளவு:

கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிசியாகி இந்திக்கு சென்ற அசின்கூட ஒரு பாலிவுட் படத்துக்காக இலங்கை சென்று வந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம். இந்த விசயத்தை இதுவரை சீக்ரெட்டாகத்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது.

அதோடு, மேற்படி நடிகையும் ஆந்திர மீடியாக்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மொத்த புராணத்தையும் வாசித்து விட்டதால், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களுக்காக கங்காரு படத்தை இயக்குகிறேன்- இயக்குனர் சாமி!உலகம் முழுவதும் உள்ள ... 5 கிலோ எடையை குறைக்க விக்ரம் சீனா பயணம்! 5 கிலோ எடையை குறைக்க விக்ரம் சீனா ...


வாசகர் கருத்து (10)

srinivasan - Abucdhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26 ஆக, 2013 - 12:14 Report Abuse
srinivasan தமிழை mathikiravarkalukku மட்டும் தமிழ் நாட்டில் வேலை வந்த வலியை மறக்க கூடாது .....ஸ்ரீனிவாசன்ஸ்ரீனிவாசன் மும்பை.
Rate this:
ramram - Pondicherry,பிரான்ஸ்
06 ஜூன், 2013 - 00:31 Report Abuse
ramram சிங்களர் அனைவரும் ராஜபக்ஷே அல்ல தமிழர் அனைவரும் மாவீரன் பிரபாகரனும் அல்ல. தமிழற்காக உயிர் கொடுத்த சிங்களரும் சிலர் உண்டு. தமிழரை நம்பவைத்து கழுத்தறுத்த தமிழர்கள் (கருனாக்கள் ) உண்டு. அகவே இந்த விடயத்தை பெரிது படுத்துவது நம் பண்புக்கும் அழகல்ல.
Rate this:
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
23 ஏப், 2013 - 08:35 Report Abuse
DHASARATHAN பிரபுதேவா கர்நாடக மாநிலத்தை சார்ந்தவர். அவர் தமிழர் என்று தமிழன் நினைப்பது தமிழனின் அறிவீனம்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:24 Report Abuse
Angry ஜெய் மொதல இவனே தமிழன் கிடையாது , எஸ் .... ஹி இஸ் பிரம் ஆந்திரா
Rate this:
bala - madurai,இந்தியா
22 ஏப், 2013 - 10:14 Report Abuse
bala நான் உன் தீவிர ரசிகன் ஆனால் நீ இப்படி பண்ணுவி நு எதிர் பார்கவில்லை ,, நீ ஒரு தமிழனா?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in