பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
30 வருடங்களுக்கு முன்பு இந்தியில் ஜிதேந்திரா- ஸ்ரீதேவி நடித்த படம் ஹிம்மத்வாலா. அந்த படத்தைதான் சமீபத்தில் அஜய்தேவ்கான்-தமன்னாவை வைத்து ஹிம்மத்வாலா என்ற அதே பெயரிலேயே ரீமேக் செய்தார்கள். ஸ்ரீதேவி நடித்த கேரக்டர் என்பதால், அவரைப்போலவே நடித்து அடுத்த ஸ்ரீதேவியாகி விடவேண்டும் என்று ரிஸ்க் எடுத்து நடித்தார் தமன்னா.
ஆனால், படுதோல்வியடைந்து விட்டது. இதனால் தாய்மொழி இப்படி தன்னை சொல்லி சொல்லி அடிக்கிறதே என்று அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறார் தமன்னா. இருப்பினும், இந்த தோல்வியை தொடர விடமாட்டேன் என்று சொல்லிக்கொள்ளும் அவர், அடுத்து இன்னொரு பெரிய இயக்குனரின் படமும் எனக்கு கிடைத்திருக்கிறது. அதனால், அந்த படம் கைகொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
ஆனபோதும், இந்தி சினிமாவில் தான் முன்னணி நடிகையாவது வெறும் கனவுதான் என்பதை புரிந்து கொண்ட தமன்னா, தமிழ், தெலுங்கில் விட்ட இடத்தை மீண்டும் கெட்டியாக பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் தமிழில் இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர், கோலிவுட்டில் தனது அடுத்த இன்னிங்சை அதிரடியாக ஆரம்பிக்கப்போவதாக கூறி வருகிறார்.