Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாமியார் வேடத்தில் ஊர்வசி!

21 ஏப்,2013 - 12:41 IST
எழுத்தின் அளவு:

மாஜி ஹீரோயினிகளில் சரண்யா போன்றோர் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்க, ஊர்வசியோ பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் மாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு அம்மா வேடம் போன்றுதானாம். ஆனால் பக்கா கிராமத்து வேடமாம். தனது முதல் படமான முந்தானை முடிச்சு படத்திலேயே கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார் ஊர்வசி. அந்த வகையில் இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் படத்திலும் தனக்கு கிராமத்து வேடம் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் நடித்தாராம் ஊர்வசி.

மேலும், கிராமத்து வயதான பெண்களைப்போன்று புடவை, உடுத்திக்கொண்டு நடித்த ஊர்வசி, டப்பிங்கைகூட அங்குள்ள பெண்கள் பேசுவதுபோன்றே பேசினாராம். அதனால் எனது நடிப்பைப்போலவே இப்படத்தில் டப்பிங்கும் பக்காவாக இருக்கும் என்று சொல்லும் ஊர்வசி, இப்படத்திற்கு டப்பிங் பேசியபோது, எனது நடிப்பைப்பார்த்து நானே மனம் நெகிழ்ந்து போனேன். அதோடு, இனி இந்த மாதிரி மனதை தொடும் கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ஊர்வசி.

நிகிஷா பட்டேல் டிரைவரை அடித்து உதைத்த ரசிகர்கள்!நிகிஷா பட்டேல் டிரைவரை அடித்து ... உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களுக்காக கங்காரு படத்தை இயக்குகிறேன்- இயக்குனர் சாமி! உலகம் முழுவதும் உள்ள ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Romeo Julliet
    • ரோமியோ ஜூலியட்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Kadhal solla neram illai
    Tamil New Film Charles Shabik Karthika (CSK)
    Tamil New Film Demonty colony

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in