தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பாஸ்கரன்- நிகிஷா பட்டேல் நடித்து வரும் படம் தலைவன். இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு, கேரளாவில் உள்ள துருத்தி என்ற இடத்தில் நடைபெற்றது. சிவசங்கரன் மாஸ்டர் நடனம் அமைத்த பாடல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தனக்கான டேக்கு முடிந்ததையொட்டி அங்கிருந்து அவசர அவசரமாக விமானத்தை பிடிப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தார் நிகிஷா. ஆனால் அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரிடத்தில் ஆட்டோகிராப் கேட்டு முண்டியடித்தார்களாம்.
அதனால் சிலருக்கு மட்டும் போட்டுக்கொடுத்து விட்டு வேகமாக அங்கிருந்த வெளியேற முற்பட்டிருக்கிறார் நிகிஷா. ஆனால் கூடிநின்ற மற்ற ரசிகர்களும் அவரிடத்தில் ஆட்டோகிராப் கேட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவரது டிரைவர் குட்டன் என்பவர் புகுந்து ரசிகர்கள் விரட்டியடித்திருக்கிறார்கள். அதைப்பார்த்து ஆத்திரம் கொண்ட அவர்கள், குட்டனை அடித்து உதைத்தார்களாம்
படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதைப்பார்த்த யூனிட்வாசிகள் ஓட்டமாக வந்து கூட்ட நெரிசலில் இருந்து நிகிஷா பட்டேலையும், டிரைவர் குட்டனையும் மீட்டுள்ளனர். இதையடுத்து அங்கு படப்பிடிப்பு நடத்த சாதகமான சூழ்நிலை இல்லாததால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார்களாம்.