Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுமாப்பிள்ளை ஆகிறார் சிம்பு!

21 ஏப்,2013 - 11:20 IST
எழுத்தின் அளவு:

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து படு சூட்டைக் கிளப்பினார் சிம்பு. அதையடுத்து அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றியதால் அவர்களை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வேகமாக பரவின. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. இருவரும் அதன்பிறகு இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர். ஏதாவது சினிமா விழாக்களில் எதேச்சையாக சந்தித்தால்கூட முகத்தை திருப்பிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அதையடுத்து அடிக்கடி சிம்புவை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், இந்த மாதிரியான கிசுகிசுக்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்புவுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் அவரது பெற்றோர் தீவிரமடைந்துள்ளனர். சமீபத்தில் வேலூரில் அவர்கள் சிம்புவுக்காக ஒரு பெண் பார்த்தார்களாம். அது மனசுக்கு திருப்தியாக இருக்க, மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி விரைவில் பிடித்தமான பெண் கிடைத்துவிட்டால், இந்த வருடம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறுமாம். ஆக, இப்போதே புதுமாப்பிள்ளை களை சிம்புவின் முகத்தில் தாண்டவமாடத் தொடங்கி விட்டது.

Advertisement
உறவுக்காரருக்கு ஷாக் கொடுத்த த்ரிஷா!உறவுக்காரருக்கு ஷாக் கொடுத்த ... அஞ்சலி கிடைத்ததால், பார்ட்டி வைத்து கொண்டாடிய ஜெய்! அஞ்சலி கிடைத்ததால், பார்ட்டி வைத்து ...

வாசகர் கருத்து

thirumal - Pondicherry,இந்தியா
23 ஏப்,2013 - 13:56
thirumal பெண் பாவம் பொல்லாதது
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப்,2013 - 17:33
Angry ஜெய் தெரிஞ்சே கிணத்துல தள்ளிராதீங்க அந்த பெண்ணை , அதுக்கு பதிலா அந்த புள்ள கன்னியாஸ்திரியா போயிறலாம் ....ஏசப்பா
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப்,2013 - 08:02
arun பாவம் அந்த பெண்
Alawdeen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஏப்,2013 - 00:56
Alawdeen வாழ்த்துக்கள்
chaks - blr  ( Posted via: Dinamalar Windows App )
21 ஏப்,2013 - 22:58
chaks all the best
gowtham - bangalore  ( Posted via: Dinamalar Android App )
21 ஏப்,2013 - 18:16
gowtham after marriage ready for divorce
Begam - Coimbatore,இந்தியா
21 ஏப்,2013 - 14:41
Begam இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு. அந்த பெண் பாவம்.
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21 ஏப்,2013 - 14:21
kumaresan.m " புது பெண்ணின் உதட்டை கடிக்காமல் இருந்தால் சரி ....ஏனெனில் இவர் சினிமா நடிகை இல்லையே "
jack - singapore,சிங்கப்பூர்
21 ஏப்,2013 - 13:55
jack இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டன்.
itashokkumar - Trichy,இந்தியா
21 ஏப்,2013 - 12:56
itashokkumar எனக்கு என்னவோ சேட்டு களை தான் தெரிகிறது.
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Eli
  • எலி
  • நடிகர் : வடிவேலு
  • நடிகை : சதா
  • இயக்குனர் :யுவராஜ்
  Tamil New Film Khaipesi Kadhal
  • கைபேசி காதல்
  • நடிகர் : கிரண் (புதுமுகம்)
  • நடிகை : அர்பிதா (புதுமுகம்)
  • இயக்குனர் :திம்மம்பள்ளி சந்த்ரா
  Tamil New Film Ru
  • ரு
  • நடிகர் : இர்பான்
  • நடிகை : ரக்ஷ்தா ,893
  • இயக்குனர் :சதாசிவம்
  Tamil New Film Adhiradi
  • அதிரடி
  • நடிகர் : மன்சூர் அலிகான்ž
  • நடிகை : ,மெளமிதா செளத்ரி
  • இயக்குனர் : ,பாலு ஆனந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in