விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சின்னத்திரை நடிகர் விஜய்ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் அறிமுகமானவர் சத்யா. இவர் நடிகர் ஆர்யாவின் தம்பி. அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே காதல் டூ கல்யாணம் என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால் வருடக்கணக்கில் வளர்ந்து வந்த அப்படம் திரைக்கே வரவில்லை. அதன்பிறகுதான் புத்தகம் படத்தில் அவரை நடிக்க வைத்தனர். ஆனால், அப்படி நடித்த அந்த படமே இரண்டொரு நாட்களிலேயே தியேட்டர்களை விட்I ஓட்டமாக ஓடிவிட்டது.
அதனால் அடுத்தபடியாக ஆர்யாவின் தம்பியை யாருமே கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், என் தம்பியிடம் நல்ல திறமை உள்ளது. புத்தகம் படத்தில் அவனது நடிப்பைப்பார்த்து நானே மிரண்டு விட்டேன் என தம்பி புராணம் பாடிக்கொண்டு திரிந்தார் ஆர்யா. ஆனால் அவர் எதிர்பார்த்த முன்னணி இயக்குனர்கள் யாருமே சத்யாவுக்கு படம் கொடுக்க முன்வரவில்லை.
இந்தநிலையில், ராட்டினம் படத்தை இயக்கிய தங்கசாமி அடுத்து தான் இயக்கும் எட்டுத்திக்கும் மதயானை படத்துக்காக சத்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தில் ஆங்க் லீயின் லைப் ஆப் பை நாயகி ஷரவந்தி நாயகியாக நடிக்கிறாராம்.