Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மா இறந்த சோகத்திலும் நடனமாடி கொடுத்த டான்ஸ் மாஸ்டர்!

21 ஏப், 2013 - 10:26 IST
எழுத்தின் அளவு:

காதல், நட்பு இரண்டையும் மையமாக வைத்து சரவணன் இயக்கி வரும் படம் முகம் நீ அகம் நான். இந்த படத்தில் இரவெல்லாம் தூங்க விடாமல் கடிக்கும் கொசுவைப்பற்றி ஒரு ஜாலியான பாடல் உள்ளதாம்.

ஏ கூறுகெட்ட பிறப்பே, கூவத்தோட சிறப்பே
நித்தம் பெருகிறீயே கொசுவே,
சித்தம் கதி கலங்க நித்தம் கடிக்கிறீயே கொசுவே
ரத்தம் குடிக்கிறீயே கொசுவே...

என்று துவங்கும் இப்பாடலை புஷ்பவனம் குப்புசாமி பாடியிருக்கிறார். மோகன்ஜி இசையமைத்திருக்கிறார். நடன இயக்குனர் கூல் ஜெயந்த்தும், மைனா புகழ் நாகலட்சுமியும் ஆடியிருக்கிறார்கள். யூனிட்டில் எல்லாருமே தயாராகிவிட்டோம். திடீரென்று ஒரு செய்தி. டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்தின் தாயார் இறந்துவிட்டார்கள் என்று. அதனால் கலங்கிப்போன ஜெயந்த் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து விட்டாராம். இதனால் படபிடிப்பையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாம். அன்றை படப்பிடிப்பை நிறுத்தினால் படக்குழுவுக்கு சுமார் ரூ.4 லட்சம் நஷ்டம் ஏற்படும் நிலை. இதனால் என்ன செய்வது என்று படக்குழுவினர் திணறி போய் நிற்க ஜெயந்த்தோ,  என்னால் படப்பிடிப்பை நிறுத்தி நீங்கள் நஷ்டப்பட வேண்டாம். சொன்னபடி நானே அந்த பாடலில் நடனமாடுகிறேன் என்று ஸ்பாட்டுக்கு வந்து மைனா நாகலெட்சுமியுடன் சிரித்தபடியே நடனமாடினார். அவரது மனசுக்குள் இறந்த சோகம் எதுவும் வெளியில் தெரியாத அளவுக்கு அந்த பாடலில் நடித்துக்கொடுத்துள்ளார்.

இதையடுத்து கூல்ஜெயந்தின் தொழில் பக்தியை மதித்து, அடுத்த நாள் நடக்கவிருந்த படப்பிடிப்பையே நிறுத்தி விட்டு, அப்படக்குழுவினர் அனைவருமே அவரது அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்களாம்.

Advertisement
இந்தியில் டப்பிங் பேசி வரும் தனுஷ்!இந்தியில் டப்பிங் பேசி வரும் தனுஷ்! மீண்டு(ம்) வருகிறார் ஆர்யாவின் தம்பி சத்யா! மீண்டு(ம்) வருகிறார் ஆர்யாவின் தம்பி ...


வாசகர் கருத்து (5)

rajaraja chozhan - madurai,இந்தியா
21 ஏப், 2013 - 23:56 Report Abuse
rajaraja chozhan இவர் அம்மா ஆத்மா சாந்தி அடைய கடவுளை ப்ராதிக்கேறேன். இவர் மேலும் முன்னேற கடவுளை ப்ராதிகேறேன்.
Rate this:
raj - Mumbai,இந்தியா
21 ஏப், 2013 - 22:45 Report Abuse
raj இந்த மாதிரி ஐய்டத்தோட ஆடணும்னா நான் எப்ப வேணும்னாலும் ரெடி
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21 ஏப், 2013 - 14:14 Report Abuse
kumaresan.m " தொழில் பக்தி மனிதனை மேல உயர வழி வகை செய்யும் "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanni Rasi
    • கன்னி ராசி
    • நடிகர் : விமல்
    • நடிகை : வரலெட்சுமி
    • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
    Tamil New Film Kalavani Mappillai
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in