ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ், முதன்முறையாக ரஞ்சனா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஆனந்தராய் என்பவர் இயக்குகிறார். தனுசுக்கு ஜோடியாக சோனம்கபூர் நடிக்கிறார். 3 படத்தில் பள்ளி மாணவராக நடித்திருந்தார் தனுஷ். அதேபோன்று இப்படத்திலும் 17 வயது பள்ளி மாணவ-மாணவியாக தனுசும், சோனம்கபூரும் நடித்துள்ளார்களாம்.
இப்படத்துக்கு தனுசுக்கு வேறு யாரையாவது வைத்து டப்பிங் கொடுக்கலாம் என்று யோசித்தபோது, நானே பேசுகிறேன் என்று சொன்னாராம் தனுஷ். அதனால் ஓரளவு இந்தி பேசத்தெரிந்த தனுஷ், அவற்றை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு தற்போது மும்பையில் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் ட்ரெயவர் வெளியாக உள்ள இப்படத்தை ஜூன் மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.