Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாலு டைட்டில் பிரச்னை வலுக்கிறது! குழப்பத்தில் சிம்பு

20 ஏப், 2013 - 15:00 IST
எழுத்தின் அளவு:

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிம்பு நடித்து வரும் படம் வாலு. இந்த படத்தில் அவருடன் ஹன்சிகாவும், சந்தானமும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தற்போது வேட்டை மன்னன் படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, அதற்கு முன்னதாக வாலு படத்தைதான் வெளியிட இருந்தார். ஆனால், திடீரென்று அதே டைட்டிலை நாங்களும் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று ஒரு படநிறுவனம் கொடி பிடித்ததால், அதிர்ந்து போன சிம்பு, வாலு படவேலைகளை அப்படியே போட்டுவிட்டு வேட்டை மன்னனில் இறங்கி விட்டார்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக வாலு படத்தில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த வாலுவில் சிம்புதானே இருக்க வேண்டும் என்று பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. காரணம், சிம்பு படம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு நடிகரின் படம் இருந்தது. அதன்பிறகுதான் ஓ... இது இன்னொரு வாலு படமா? அப்படின்னா இதே டைட்டிலில் இன்னும எத்தனை படங்கள் வரப்போகிறதோ தெரியவில்லையே என்று சிம்புவைப்போலவே இப்போது ரசிகர்களும் குழம்பிப்போயிருக்கின்றனர்.

ஆக, இரண்டு படநிறுவனங்களுமே நாங்கள்தான் வாலு டைட்டிலை பதிவு செய்து வைத்துள்ளோம் என்று கோரசாக சொல்லியபடி கொடி பிடித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த பிரச்னையை தீர்க்க, தயாரிப்பாளர் சங்கத்தை நாடுவதா? இல்லை கோர்ட்டுக்கு செல்வதாக என்று இரண்டு நிறுவனங்களுமே கையை பிசைந்து கொண்டு நிற்கின்றன.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:37 Report Abuse
Angry ஜெய் ராசிகார பய டா நீ
Rate this:
baas - ambur  ( Posted via: Dinamalar Android App )
21 ஏப், 2013 - 12:28 Report Abuse
baas குரங்கு வாலு பெயர் நன்றாகருக்குமே
Rate this:
vmega - vellore,இந்தியா
21 ஏப், 2013 - 07:42 Report Abuse
vmega very easy How is this title' simbuwin vaalu'.
Rate this:
SARGUNAM - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
21 ஏப், 2013 - 06:23 Report Abuse
SARGUNAM எப்படியும் சிம்பு படம் ஊத்தி்க்க போவுது இதற்கு பேசாம காசை வாங்கி கிட்டு விட்டு கொடுத்துடுடா சிம்பு தம்பி
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
20 ஏப், 2013 - 19:46 Report Abuse
kumaresan.m " நாட்டுல சினிமா தலைப்புக்கு போட்டியா ?......வாலு என்னையா அர்த்தம் இதுக்கு ? இதுக்கு போய் கோர்ட்டு கேசுன்னு அலைச்சிகிட்டு பேசாம ......அடங்காதவன் என்று பெயர் வைத்து விட்டு போங்கையா "
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in