Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவுக்கு ஜோடியாகும் பார்வதி ஓமணக்குட்டன்!

20 ஏப், 2013 - 11:03 IST
எழுத்தின் அளவு:

இரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்று இப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதனால், தனது உடம்பிலும், முகத்திலும் எந்த முதிர்ச்சியும் தென்படக்கூடாது என்பதற்காக இப்போது டயட்ஸை கடைபிடித்து உடம்பையும் பராமரித்து வருகிறார்.

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகையைத்தான் நடிக்க வைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குனர் யுவராஜ். அப்படி அவர் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இப்போது அஜீத்துடன் பில்லா-2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதேசமயம்  இன்னொரு ஹீரோயினி தேடும் படலமும் தொடங்கியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
20 ஏப், 2013 - 13:29 Report Abuse
kumaresan.m "வடிவேலு காட்டுல அடை மழை தான் போங்க ....ஆஹா ..ஆஹா ..ஆரம்பிச்சிட்டாங்கையா ...ஆரம்பிச்சிட்டாங்கையா ....
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
20 ஏப், 2013 - 12:42 Report Abuse
Angry ஜெய் தல கூட நடிச்ச பிறகுதான் கிராப் எகிறுது ஓமனைக்கு
Rate this:
Sankar - Chennai,இந்தியா
20 ஏப், 2013 - 12:29 Report Abuse
Sankar அஜித் கூட நடிச்சா இப்படி தான் சான்ஸ் கிடைக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in