ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கு துருவ நட்சத்திரம் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கம்-2 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமியின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களில் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார் சூர்யா. இதில் முதலில் துவங்குவது கவுதம் மேனன் படம் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களின் வெற்றிக்கு பிறகு, சூர்யா-கவுதம் மேனன் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.
இந்நிலையில் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு "துருவ நட்சத்திரம்" என்று பெயர் வைத்துள்ளனர். இதை கவுதமே உறுதி செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கூடும் என தெரிகிறது. கடைசியாக கவுதம் இயக்கிய இரண்டு படங்கள் சரியாக போகாததால், இந்த படத்தை கட்டாயம் வெற்றியாக்க வேண்டும் என்ற வெறியோடு இப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.