ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஸ்ரீகாந்த், அந்த சூழலை வைத்துக்கொண்டு பாகன் என்ற படத்தில் நடித்தார். காமெடி கதைக்களம்தான். என்றபோதும், அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி கொடுக்கவில்லை. அந்த அதிர்ச்சி காரணமாக, அடுத்தடுத்து ஸ்ரீகாந்த் நடித்து வந்த சில படங்களும் கிடப்பில் போடப்பட்டன,
ஆனால் ஸ்ரீகாந்த் மனம் தளரவில்லை. நல்ல காமெடி கதையாகதேடி வந்தார். அப்போது அவருக்கு கிடைத்ததுதான் ஓம் சாந்தி ஓம் என்ற படம். தலைப்பு பக்திமயமாக இருந்தாலும், அதிரடியான காமெடி படமாம். இந்த முறை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியுள்ள ஸ்ரீகாந்த், முதன்முறையாக முக்கிய காமெடி காட்சிகளை ரிகர்சல் பார்த்து விட்டே ஸ்பாட்டுக்கு வருகிறாராம். இதனால் இதற்கு முன்பு காமெடியாக நடித்து விட்டு தான் மட்டுமே சிரித்துக்கொள்வாராம். ஆனால் இந்த படத்தில் அவர் காமெடியாக நடிப்பதைப்பார்த்து கூடிநிற்கும் யூனிட்வாசிகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம. ஆக, காமெடியிலும் தேறி விட்டாராம் ஸ்ரீகாந்த்.