Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!

17 ஏப், 2013 - 08:35 IST
எழுத்தின் அளவு:

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று(17.04.13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

1922ம் ஆண்டு திருச்சியில் பிறந்த ராமமூர்த்தி இயல்பாகவே இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசுவாமியும், தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும் பிரபல வயலின் கலைஞர்கள். தனது அப்பா மற்றும் தாத்தாவை போலவே ராமமூர்த்தியும் வயலின் கலைஞராக தனது இசையுலக பயணத்தை தொடங்கினர். சிறுவயதிலேயே பல்வேறு மேடை கச்சேரிகளில் வயலின் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கட்ராமன் தான் ராமமூர்த்தியை சினிமாவிற்கு கொண்டு வந்தார். பின்னர் சி.ஆர்.சுப்புராமன் ஆகியோருடன் பணியாற்றியவர் பிறகு விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.

இவர்களது இருவரும் இணைந்து பணியாற்றிய பெரும்பாலான படங்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 1964-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இருவரும் பிரிந்தனர். விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க தொடங்கினர்.

ராமமூர்த்தி தனியாக கிட்டத்தட்ட 19 படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனியாக இசையமைத்த சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் ஆகிய படங்கள் மிகப்பிரபலம். மிகச்சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் 1995-ம் ஆண்டு எங்கிருந்தோ வந்தான் படத்தில் மீண்டும் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து பணியாற்றினார்கள். சினிமாவில் வாய்ப்பு குறைந்தபோதும், தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பங்கேற்று வந்தார் ராமமூர்த்தி. சமீபத்தில் கூட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட 40க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ராமமூர்த்தி. மறைந்த ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.

மறைந்த ராமமூர்த்தியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை(18.04.13) நடைபெறும் என அவரது மகன் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மறைந்த ராமமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மற்றொரு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ராமமூர்த்தியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
18 ஏப், 2013 - 12:10 Report Abuse
kumaresan.m 'ஆழ்ந்த அனுதாபங்கள் ....இசை ஜாம்புவானின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் " ......மேல் மட்டத்தில் இருந்த இசையை பாமரன் வரை கொண்டு சென்று இசை கடலில் குளிக்க செய்த பெருமை இவரையே சேரும் ,
Rate this:
Guru - THANJAVUR  ( Posted via: Dinamalar Android App )
18 ஏப், 2013 - 09:57 Report Abuse
Guru நல்ல இசையமைப்பாளர்
Rate this:
sethuraman krishnamurthy - chennai,இந்தியா
18 ஏப், 2013 - 09:00 Report Abuse
sethuraman krishnamurthy நேற்று பி பி ஸ்ரீநிவாஸ், இன்று ராமமூர்த்தி பாவம் கலை உலகம் ஒவ்வொரு மேதைஐயும் இழக்கிறது
Rate this:
Durai selvaraju - Al Mangaf,குவைத்
18 ஏப், 2013 - 08:15 Report Abuse
Durai selvaraju எது எப்படியோ... காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களில் இவருடைய பங்கும் இருக்கின்றது. யாருடைய பங்கு பெரியது என்று அவர்களே விவாதித்துக் கொள்ளவில்லை. அதை நாம் அலசுவது முறையல்ல.. பெரியவர் திரு. ராமமூர்த்தி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Rate this:
kumaraj - chennai,இந்தியா
18 ஏப், 2013 - 06:46 Report Abuse
kumaraj இசை உள்ளவரை இவர் புகழ் வாழும்
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in