பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு ரஜினிகாந்த்தும், ஐஸ்வர்யா ராய்யும் கலந்து பங்கேற்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன், இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. வழக்கமாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள்தான் இந்த விழாவில் பெருமளவு கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு, கேன்ஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக மே மாதம் அவர் பிரான்ஸ் செல்கிறார். அவர் இரு வேடங்களில் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘கோச்சடையான் படத்தின் டிரெய்லர் இதில் வெளியிடப்படுகிறது. கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்துள்ளார். இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார். அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘தி கிரேட் கேட்ஸ்பி என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படுவதால், சிறப்பு அழைப்பாளராக அவர் கேன்ஸ் செல்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்கிறார்.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகை ஐஸ்வர்யா ராயை பிரெஞ்ச் அரசு சார்பில் அழைத்துள்ளனர். சென்ற வருடம், அவருடைய பிறந்த நாளின்போது, பிரான்ஸ் நாட்டு அரசு அவருக்கு தங்கள் நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதினை அளித்து கவுரவித்தது நினைவிருக்கலாம். கேன்ஸ் விழாக்களில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். இதுகுறித்து பிரெஞ்ச் தூதர் பிரான்க்காய்ஸ் ரிச்சியர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதன் மூலம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டார். வரும் திரைப்பட விழாவில், இந்திய சினிமா குறித்து அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்திய திரை உலகின் முக்கிய பிரமுகர்களை இந்த விழாவுக்கு அழைக்கப் போகிறோம். ஐஸ்வர்யா ராயும் சிறப்பு அழைப்பினைப் பெறுவார்," என்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு வைத்துதான் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுகிறார். அடுத்து பாலிவுட் சாதனை நடிகர் அமிதாப் பச்சன் தனது முதல் ஹாலிவுட் படத்துக்காக கேன்ஸ் விழாவுக்கு செல்கிறார். எனவே இந்த ஆண்டு கேன்ஸ் விழா, இந்திய திரைப்பட திருவிழாவாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.